சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
சி.எஸ்.ஐ.ஆர்-எஸ்.இ.ஆர்.சி மற்றும் சி.எஸ்.ஐ.ஆரின் சென்னை வளாகம் இணைந்து அறிவுசார் சொத்துரிமை குறித்த பயிலரங்கை நடத்தின
प्रविष्टि तिथि:
17 MAY 2024 6:27PM by PIB Chennai
தேசிய அறிவுசார் சொத்துரிமை விழா 2024-ன் ஒரு பகுதியாக, அறிவுசார் சொத்துரிமை குறித்த ஒரு நாள் பயிலரங்கை மத்திய தொழிலக ஆராய்ச்சி கவுன்சிலின் கட்டமைப்பு பொறியியல் ஆய்வு நிறுவனமும், மத்திய தொழிலக ஆராய்ச்சி கவுன்சிலின் சென்னை வளாகமும் இணைந்து இன்று (17.05.2024) ஏற்பாடு செய்திருந்தன. இந்தப் பயிலரங்கில், சி.எஸ்.ஐ.ஆர்-எஸ்.இ.ஆர்.சி இயக்குநரும், சென்னை வளாகத்தின் ஒருங்கிணைப்பு இயக்குநருமான டாக்டர் என்.ஆனந்தவல்லி வரவேற்புரை நிகழ்த்தினார்.
சென்னையில் உள்ள இந்திய காப்புரிமை அலுவலகத்தின் காப்புரிமை மற்றும் வடிவமைப்பு துணைக் கட்டுப்பாட்டாளர் திரு எஸ். உதய சங்கர், இந்த நிகழ்ச்சியில் விரிவுரையாற்றினார். அவர் தமது உரையில், அறிவுசார் சொத்துரிமையின் முக்கியத்துவம் மற்றும் அதைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கினார்.

***
AD/PLM/AG/DL
(रिलीज़ आईडी: 2020947)
आगंतुक पटल : 135
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English