சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
சிஎஸ்ஐஆர்- கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம் மற்றும் சிஎஸ்ஐஆர் - மெட்ராஸ் வளாகம் இணைந்து தேசிய தொழில்நுட்ப தினத்தை கொண்டாடின
Posted On:
15 MAY 2024 8:13PM by PIB Chennai
சிஎஸ்ஐஆர் -கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம் (CSIR-SERC) மற்றும் சிஎஸ்ஐஆர் மெட்ராஸ் வளாகம் (CMC) இணைந்து தேசிய தொழில்நுட்ப தினத்தை மிகுந்த உற்சாகத்துடன் 15 மே 2024 அன்று கொண்டாடின.
விழாவுக்கு சிஎஸ்ஐஆர்-எஸ்இஆர்சி இயக்குநரும், சிஎம்சி ஒருங்கிணைப்பு இயக்குநருமான முனைவர் என். ஆனந்தவல்லி தலைமை வகித்தார். முனைவர் சந்திரிகா கௌசிக், தலைசிறந்த விஞ்ஞானி மற்றும் பொது இயக்குநர் - உற்பத்தி ஒருங்கிணைப்பு மற்றும் சேவைகள் தொடர்பு (PC & SI), பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO), புது தில்லி அவர்கள் விழாவின் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார். தேசிய தொழில்நுட்ப தினத்தை முன்னிட்டு அனைத்து பங்கேற்பாளர்களையும் டாக்டர் ஆனந்தவல்லி வரவேற்று, இந்தியாவின் தொழில்நுட்ப வல்லமையைக் குறிக்கும் வகையில் இந்த தினம் 1999 முதல் கொண்டாடப்படுகிறது என்று குறிப்பிட்டார். 1998 ஆம் ஆண்டு போக்ரான் அணு ஆயுத சோதனைகளின் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ஹன்சா இலகுரக விமானத்தின் முதல் விமானம் மற்றும் மேற்பரப்பில் இருந்து வான் ஏவுகணை திரிசூல் உருவாக்கம் ஆகிய இந்தியாவின் மூன்று குறிப்பிடத்தக்க தொழில்நுட்ப சாதனைகளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது என்று அவர் தேசிய தொழில்நுட்ப தினத்தை விளக்கினார். இந்த ஆண்டின் தேசிய தொழில்நுட்ப தின கருப்பொருளான - நிலையான எதிர்காலத்திற்கான சுத்தமான மற்றும் பசுமையான தொழில்நுட்பங்களை ஊக்குவிப்பது சம்பந்தமாக CSIR-SERC ஆல் உருவாக்கப்பட்ட பசுமை மற்றும் நிலையான தொழில்நுட்பங்கள் மற்றும் சிக்கலான பொறியியல் சிக்கல்களுக்கு தீர்வாக செயல்பட்ட CSIR-SERC இன் தொழில்நுட்ப தலையீடுகள் குறித்து விளக்கினார்.
CSIR-SERC இன் முதன்மை விஞ்ஞானி முனைவர் ஜே. ராஜாசங்கர், தலைமை விருந்தினரை பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தினார். முனைவர் சந்திரிகா கௌசிக் தேசிய தொழில்நுட்ப தின விரிவுரையை ’கட்டமைப்புகள் பொறியியல் : அற்புதங்கள் முதல் ஆய்வு அறிவியல் வரை’ என்ற தலைப்பில் வழங்கினார். அவர் தனது விரிவுரையில் தேசிய தொழில்நுட்ப தினத்தின் தோற்றம் மற்றும் நாட்டின் விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் சாதனைகளை நினைவுகூர்ந்தார். இந்த ஆண்டின் கருப்பொருளைக் குறிப்பிடுகையில், விஞ்ஞான சமூகம் ஒரு நிலையான எதிர்காலத்தை அடைவதற்கு கூட்டாக பணியாற்ற வேண்டும் என்று கூறினார். பழமையான கட்டிடங்கள் முதல் வானளாவிய கட்டிடங்கள் வரையிலான கட்டமைப்புகளின் பரிணாம வளர்ச்சி, தமிழ்நாட்டின் பண்டைய பொறியியல் அற்புதங்கள், ஆராய்ச்சி சமூகத்தின் பொறியியல் கட்டமைப்புகள், கட்டமைப்பு கூறுகளின் பரிணாமம், கட்டமைப்பு கூறுகளின் தொழில்நுட்பங்களில் புதுமை, கட்டிடக்கலை செயல்முறையின் போக்குகள், இயற்கைக்கு உகந்த கட்டமைப்புகள் மற்றும் கடினமான பொறியியல் மற்றும் நம் முன் இருக்கும் சவால்கள் குறித்து விரிவாகப் பேசினார். பண்டைய இந்திய நாகரிகம் பல்வேறு கட்டமைப்புகளைக் கொண்டிருந்தது மற்றும் கடுமையான இயற்கை பேரழிவுகளையும் தாங்கும் பல சிறந்த கட்டிடக்கலை தலைசிறந்த படைப்புகளை உருவாக்கியது என்பதை அவர் எடுத்துரைத்தார். சமூகத்தின் முன்னேற்றத்திற்கான நிலையான தீர்வுகளை உருவாக்க பல்வேறு நிறுவனங்களின் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி அர்த்தமுள்ள வகையில் ஒத்துழைக்குமாறு விஞ்ஞான சமூகத்தை அவர் அழைப்பு விடுத்தார்.
சிஎஸ்ஐஆர்-எஸ்இஆர்சியின் முதன்மை விஞ்ஞானி முனைவர் ஜி. எஸ். பழனி நன்றியுரை வழங்கினார்.
Photo2JKBM.jpg)
Photo4LHFU.jpg)
###
AD/DL
(Release ID: 2020737)
Visitor Counter : 83