நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

7.32% அரசுப் பங்கு பத்திரங்கள் 2030, 7.30% அரசுப் பங்கு பத்திரங்கள் 2053 (வெளியீடு / மறு வெளியீடு) விற்பனைக்கான ஏலம்

प्रविष्टि तिथि: 06 MAY 2024 9:22PM by PIB Chennai

பலவகை விலை முறையைப் பயன்படுத்தி விலை அடிப்படையிலான ஏலத்தின் மூலம் ரூ.11,000 கோடிக்கு “7.32% அரசுப் பங்கு பத்திரங்கள் 2030"-ஐயும், ரூ.9,000 கோடிக்கு "7.30% அரசுப் பங்கு பத்திரங்கள் 2053"-ஐயும், விற்பனை செய்வதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மேலே குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு பிணையத்திற்கும் எதிராக ரூ.2,000 கோடி வரை கூடுதல் சந்தாவை மத்திய அரசு வைத்துக்கொள்ளலாம். இந்த ஏலம் மும்பையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கி அலுவலகத்தால் மே 10, 2024 (வெள்ளிக்கிழமை) அன்று நடத்தப்படும்.

பத்திரங்களின் விற்பனைக்கு அறிவிக்கப்பட்ட தொகையில் 5% வரை அரசுப் பத்திரங்களின் ஏலத்தில் போட்டித்தன்மையற்ற ஏல வசதிக்கான திட்டத்தின்படி தகுதியான தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படும்.

போட்டி மற்றும் போட்டி அல்லாத ஏலங்கள் இரண்டும் மே 10, 2024 அன்று இந்திய ரிசர்வ் வங்கியின் கோர் பேங்கிங் சொல்யூஷன் (இ-குபெர்) அமைப்பில் மின்னணு வடிவத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். போட்டி அல்லாத ஏலங்களை காலை 10:30 மணி முதல் 11:00 மணி வரை சமர்ப்பிக்க வேண்டும். போட்டி ஏலங்களை காலை 10:30 மணி முதல் 11:30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

ஏலத்தின் முடிவு மே 10, 2024 (வெள்ளிக்கிழமை) அன்று அறிவிக்கப்படும். வெற்றிகரமான ஏலதாரர்கள், மே 13, 2024 திங்கட்கிழமைக்குள் பணம் செலுத்த வேண்டும்.

***

PKV/BR/KV

 

 

 


(रिलीज़ आईडी: 2019823) आगंतुक पटल : 113
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi