சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
கல்பாக்கத்திலுள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் (IGCAR) அதன் நிறுவன தினத்தைக் கொண்டாடியது
प्रविष्टि तिथि:
30 APR 2024 9:17PM by PIB Chennai
அணுசக்தித் துறையின் (DAE) கீழ், செயல்படும் இரண்டாவது பெரிய அணு ஆராய்ச்சி நிறுவனமான கல்பாக்கத்திலுள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் (IGCAR), அதன் நிறுவன தினத்தைக் இன்று (30.04.2024) கொண்டாடியது.
அணுசக்தி ஆணையத்தின் அப்போதைய தலைவரான டாக்டர். விக்ரம் சாராபாயின் நிர்வாக உத்தரவின்படி ஏப்ரல் 30, 1971 இல் அணுஉலை ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டது, பின்னர் டிசம்பர் 1985 இல் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் எனப் பெயர் மாற்றப்பட்டது.
இன்றைய விழாவில் சிறப்பு விருந்தினராக மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் மற்றும் புகழ்பெற்ற விஞ்ஞானி விவேக் பாசின் கலந்து கொண்டார். ஹோமி பாபா நேஷனல் இன்ஸ்டிட்யூட் (HBNI) துணைவேந்தர் டாக்டர். யு. காமாட்சி முதலி மற்றும் மிஷ்ரா தாது நிகாம் லிமிடெட் (மிதானி) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் சஞ்சய் குமார் ஜா ஆகியோர் கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
நிறுவன தினக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஐ.ஜி.சி.ஏ.ஆர்.யின் இயக்குநர் டாக்டர் என். சிவராமன் வரவேற்றார். ஐ.ஜி.சி.ஏ.ஆர்.யின் தோற்றத்தின் வரலாற்றை அதன் தற்போதைய வளர்ச்சியைக் காட்டும் காணொளியைத் தொடர்ந்து, புகழ்பெற்ற விஞ்ஞானியும் ஐ.ஜி.சி.ஏ.ஆர்.யின் இயக்குநருமான டாக்டர் B. வெங்கட்ராமன், மையத்தின் பல்வேறு திட்டங்களுக்கான தனித்துவமான சாதனைகள் மற்றும் வருங்கால திட்டங்களை விளக்கினார்.
ஸ்ரீ விவேக் பாசின், "சமூகத்தின் நலனுக்காக ரேடியோஐசோடோப்புகளின் (ஈட்ரியம் -90, பாஸ்பரஸ் -32) முன்னோடி திட்ட அளவிலான உற்பத்தியை" கொடியசைத்து தொடங்கிவைத்து, தனது உரையில், துறையின் பார்வையை விளக்கி, பல்வேறு பிரிவுகள் ஆற்றிவரும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை எடுத்துரைத்தார்.
நாட்டின் வளர்ச்சிக்கு எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கி பயணிக்க வேண்டும். அமிர்த காலத்தில் வளர்ச்சியடைந்த தேசமாக மாறும் தற்சார்பு இந்தியா கனவை நனவாக்க அணுசக்தி துறையின் பங்கை விளக்கினார்.
மிதானியின் சிஎம்டி டாக்டர் சஞ்சய் குமார் ஜா, பல்வேறு இணை பாடத்திட்டங்களில் சிறந்து விளங்கும் ஊழியர்களை பாராட்டி, கூட்டத்தில் உரையாற்றினார். அவர் தனது உரையில், மிதானி மற்றும் அணுசக்தி துறைக்கு இடையிலான நீண்டகால ஒத்துழைப்பை விவரித்தார் மற்றும் ஐ.ஜி.சி.எ.ஆர். இல் பின்பற்றப்படும் தனித்துவமான வலிமைகளை பாராட்டினார்.
2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் சிறந்த ஆய்வுக் கட்டுரையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹோமி பாபா தேசிய நிறுவனத்தின் அறிஞர்களுக்குப் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை ஹோமி பாபா தேசிய நிறுவனத்தின் துணைவேந்தர் டாக்டர் யு. காமாட்சி முதலி வழங்கினார். தனது உரையில், ஐ.ஜி.சி.எ.ஆர். உடனான தனது மறக்கமுடியாத பயணத்தை நினைவுகூர்ந்தார் மற்றும் ஹோமி பாபா தேசிய நிறுவனத்தின் சிறப்பை எடுத்துரைத்தார். ஸ்ரீமதி. அஜிதா தரியன், தலைமை நிர்வாக அதிகாரி, ஐ.ஜி.சி.எ.ஆர். நன்றியுரை ஆற்றினார். பல்வேறு அணுசக்தி துறை பிரிவுகளின் மூத்த அதிகாரிகள், முன்னாள் இயக்குநர்கள், நிர்வாகம் மற்றும் கணக்குகளின் முன்னாள் அதிகாரிகள், ஆதரவு அமைப்புகளைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் மற்றும் கல்பாக்கத்தில் உள்ள பள்ளிகளின் முதல்வர்கள் ஆகியோர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

***
AD/DL
(रिलीज़ आईडी: 2019243)
आगंतुक पटल : 110
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English