சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

மட்கக்கூடிய பிளாஸ்டிக் ஷாப்பிங் பைகள் மற்றும் மட்கக்கூடிய பிளாஸ்டிக் குடிநீர் உறிஞ்சு குழாய்களின் இந்திய தரநிலை பற்றிய விவாதம் மதுரையில் இன்று நடைபெற்றது

Posted On: 28 MAR 2024 8:03PM by PIB Chennai

மட்கக்கூடிய பிளாஸ்டிக் ஷாப்பிங் பைகள் மற்றும் மட்கக்கூடிய பிளாஸ்டிக் குடிநீர் உறிஞ்சு குழாய்கள் பற்றிய கலந்துரையாடலை இந்திய தரநிர்ணய அமைவனம், இன்று (28.03.2024) மதுரையில் நடத்தியது. இந்தக் கலந்துரையாடலில் கப்பலூர் தொழில்துறை  உற்பத்தியாளர்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த பங்குதாரர்கள், பிஐஎஸ் புதுதில்லி மற்றும் பிஐஎஸ், மதுரையைச் சேர்ந்த அதிகாரிகள், மதுரை சிப்பெட் பிரதிநிதிகள், பி.டி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

 

இந்திய தரநிர்ணய அமைவனம், மதுரை மூத்த இயக்குநர் மற்றும் தலைவர் திரு சு..தயானந்த், நிகழ்ச்சியின் நோக்கங்களை விளக்கினார். பிளாஸ்டிக் பைகளின் அதிகப்படியான பயன்பாடு மற்றும் நிலையான வளர்ச்சி இலக்குகள் குறித்து பங்கேற்பாளர்களுக்கு அவர் தெரிவித்தார். இந்த இலக்குகளை மனதில் வைத்து இந்திய தரநிலைகள் உருவாக்கப்படுகின்றன என்றும் அவர் கூறினார். தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய ஓய்வு பெற்ற உறுப்பினர் செயலாளர் திரு.விஜயபாஸ்கர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். உலகம் முழுவதும், குறிப்பாக இந்தியாவிற்குள் பிளாஸ்டிக் மாசுபாட்டைக் குறைப்பதில் மட்கும் தன்மை கொண்ட பிளாஸ்டிக்கின் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார். கப்பலூர் தொழிலதிபர்கள் சங்கத் தலைவர் பி.என்.ரகுநாத ராஜா சிறப்புரையாற்றினார். .எஸ். முத்திரையிடப்பட்ட தயாரிப்புகளின் முக்கியத்துவத்தை அவர் விளக்கினார் மற்றும் உற்பத்தியாளர்களை பி..எஸ் சான்றிதழுக்கு விண்ணப்பிக்க ஊக்குவித்தார்.

தொழில்துறை மட்கும் பிளாஸ்டிக் ஷாப்பிங் பைகள் மற்றும் தொழில்துறை மட்கக்கூடிய பிளாஸ்டிக் குடிநீர் உறிஞ்சு குழாய்யின் முக்கிய அம்சங்கள் பற்றிய ஆழமான விளக்கக்காட்சியை மதுரை பிஐஎஸ் இணை இயக்குநர், திருமதி. ஹேமலதா பி பணிக்கர்,  மற்றும் புதுதில்லி பிஐஎஸ், உதவி இயக்குநர் திரு. சிவம் திவேதி ஆகியோர் வழங்கினர்.

விளக்கக்காட்சியின் பின்னர் விரிவான திறந்தவெளி விவாதம் நடத்தப்பட்டது மற்றும் தரநிலைகள் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டது.

    

----

SMB/KRS



(Release ID: 2016603) Visitor Counter : 51


Read this release in: English