சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
சிஎஸ்ஐஆர்-எஸ்இஆர்சி மற்றும் சிஎஸ்ஐஆர்-சிஎம்சி-ல் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது
प्रविष्टि तिथि:
25 MAR 2024 7:16PM by PIB Chennai
சென்னையில் உள்ள அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி குழுமம் (சிஎஸ்ஐஆர்) - கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம், சிஎஸ்ஐஆர் சென்னை வளாகத்தில் சர்வதேச மகளிர் தினம் 2024, மார்ச் 25 அன்று உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் இந்து தமிழ் திசை உதவி செய்தி ஆசிரியர் திருமதி பிருந்தா சீனிவாசன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். கௌரவ விருந்தினராக எழுத்தாளர், நாவலாசிரியர் மற்றும் சினிமா வசனகர்த்தா திருமதி பொற்கொடி கலந்து கொண்டார். சி.எஸ்.ஐ.ஆர்-எஸ்.இ.ஆர்.சி இயக்குநரும், சி.எம்.சி.யின் ஒருங்கிணைப்பு இயக்குநருமான டாக்டர் என். ஆனந்தவல்லி வரவேற்றார். அவர் தனது தொடக்க உரையில், பெண்களின் பங்களிப்புகளை அங்கீகரிப்பதற்கும், பாலின சமத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது என்று கூறினார்.
திருமதி பொற்கொடி பேசிய போது, பெண்கள் தங்களை மதிக்க வேண்டும், சவால்களை வெல்ல வேண்டும், தங்கள் பலங்களில் கவனம் செலுத்த வேண்டும், தங்கள் நோக்கங்களில் சமரசம் செய்யக்கூடாது என்று வலியுறுத்தினார்.
திருமதி பிருந்தா சீனிவாசன் உரையாற்றிய போது, பெண்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சமூக அழுத்தம், கட்டுப்பாடுகள் மற்றும் பாலினப் பாகுபாடு குறித்த சமூக கண்ணோட்டம் பற்றி பேசினார்.
அதனைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளும், குழுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. சி.எஸ்.ஐ.ஆர்-எஸ்.இ.ஆர்.சி.யின் மூத்த தொழில்நுட்ப அதிகாரி டாக்டர் மைமூன் முகல் நன்றியுரை ஆற்றினார்.



***
AD/IR/AG/KRS
(रिलीज़ आईडी: 2016339)
आगंतुक पटल : 158
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English