தேர்தல் ஆணையம்
மக்களவை மற்றும் நான்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகள் அறிவிப்பு
Posted On:
16 MAR 2024 7:07PM by PIB Chennai
மக்களவைத் தேர்தல் 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நடைபெறுகிறது.
*முதல் கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
*89 தொகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 26-ம் தேதி நடைபெறுகிறது.
*94 தொகுதிகளுக்கு 3 ஆம் கட்டம் வாக்குப்பதிவு மே 7-ம் தேதி நடைபெறுகிறது.
*96 தொகுதிகளுக்கு 4 ஆம் கட்டம் வாக்குப்பதிவு மே 13-ம் தேதி நடைபெறுகிறது.
*49 தொகுதிகளுக்கான 5 ஆம் கட்டம் வாக்குப்பதிவு மே 20-ம் தேதி நடைபெறுகிறது.
*57 தொகுதிகளுக்கான 6 ஆம் கட்டம் வாக்குப்பதிவு மே 25-ம் தேதி நடைபெறுகிறது.
*57 தொகுதிகளுக்கான இறுதி மற்றும் 7வது கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதி நடைபெறுகிறது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி :
தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது . தமிழ்நாட்டில் விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறுகிறது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தேர்தல் நடைமுறைகள் :
* வேட்புமனு தாக்கல் தொடக்கம்- மார்ச் 20
* வேட்புமனு தாக்கல் முடிவு- மார்ச் 27
* வேட்புமனு பரிசீலனை - மார்ச் 28
* வேட்புமனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள்: மார்ச் 30
* வாக்குப்பதிவு- ஏப்ரல் 19
4 மாநில சட்டப் பேரவைத் தேர்தல்கள்:
மக்களவைத் தேர்தலுடன் நான்கு மாநில சட்டப்பேரவை தேர்தல்களும் நடைபெற உள்ளன. அதற்கான தேதி விவரங்கள்:
ஆந்திரா: வாக்குப்பதிவு – மே 13, 2024
அருணாச்சலப் பிரதேசம்: வாக்குப்பதிவு – ஏப்ரல் 19, 2024
சிக்கிம்: வாக்குப்பதிவு – ஏப்ரல் 19, 2024
ஒடிசா:
மே 13, 2024 (28 சட்டப் பேரவைத் தொகுதிகள்),
மே 20, 2024 (35 தொகுதிகள்),
மே 25 (42 தொகுதிகள்),
ஜூன் 1 (42 தொகுதிகள்)
தேர்தல் முடிவுகள்:
மக்களவைத் தேர்தல், நான்கு மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் மற்றும் சட்டப் பேரவை இடைத் தேர்தல்களில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் 2024 ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2015237
***
ANU/AD/PLM/DL
(Release ID: 2015257)
Visitor Counter : 421