குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
உத்தரப்பிரதேச மாநிலம் ஜலாவுன் மாவட்டம் கொஞ்ச் என்னுமிடத்தில் கயிறு ஷோரூமுக்கு திரு பானு பிரதாப் சிங் வர்மா அடிக்கல் நாட்டினார்
Posted On:
15 MAR 2024 11:27AM by PIB Chennai
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள்துறை இணை அமைச்சர் திரு பானு பிரதாப் சிங் வர்மா மார்ச் 14 அன்று உத்தரப்பிரதேசத்தின் ஜலாவுன் மாவட்டத்தில் உள்ள கொஞ்ச் என்னுமிடத்தில் கயிறு ஷோரூமுக்கு அடிக்கல் நாட்டி பூமி பூஜை செய்தார். உத்தரப்பிரதேசத்தில் பலதரப்பட்ட தயாரிப்புகள் மற்றும் அதன் பல்வேறு பயன்பாடுகளை ஊக்குவிக்கவும், இந்தத் துறையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் கயிறு வாரியம் எதிர்பார்ப்பதாக திரு வர்மா கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையின்படியும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் திரு நாராயண் ரானே-யின் வழிகாட்டுதலின்படியும், மரபுசாரா பகுதிகளில் கயிறு தொழிலை மேம்படுத்த கயிறு வாரியம் முன்மொழிந்துள்ளது என்று அவர் கூறினார்.
அலகாபாத், கான்பூர், லக்னோ மற்றும் வாரணாசி ஆகிய 4 ஷோரூம்களை உத்தரப்பிரதேசத்தில் கயிறு வாரியம் கொண்டுள்ளது என்று திரு வர்மா தெரிவித்தார். உத்தரபிரதேசத்தில் நிறைய சந்தை வாய்ப்பு உள்ளது. கயிறு வாரியம் 2022 & 2023 ஆம் ஆண்டில் நடைபெற்ற காசி-தமிழ் சங்கமம் மற்றும் உத்தரபிரதேசத்தில் பல கண்காட்சிகளில் தீவிரமாக பங்கேற்றுள்ளது.
உள்நாட்டு சந்தையை மேம்படுத்துவதற்கான வாரியத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாக, இதுவரை பயன்படுத்தப்படாத சந்தைகளில் புதிய ஷோரூம்கள் / விற்பனை நிலையங்கள் திறக்க முன்மொழியப்பட்டுள்ளன என்று அமைச்சர் கூறினார். வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிப்பதுடன், நாட்டின் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கும் பெரும் பங்களிப்பை அளிக்கின்றன. கயிறுத் தொழில் தனது உற்பத்திப் பொருட்களைப் பயன்படுத்துவதில் புதிய வழிகளைத் திறந்து வருவதாகவும், வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கான திட்டங்கள் மற்றும் சேவைகளை பிரபலப்படுத்துவதன் மூலம் நாடு தழுவிய இந்தியாவை நோக்கி நகர்ந்து வருவதாகவும் அவர் கூறினார்.
-----
(Release ID: 2014815)
PKV/KPG/KRS
(Release ID: 2015033)
Visitor Counter : 75