சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு, தரம் குறித்த நுகர்வோர் விழிப்புணர்வுக்கான கார் பேரணியை இந்திய தர நிர்ணய அமைவனம் நடத்தியது

இடுகை இடப்பட்ட நாள்: 13 MAR 2024 6:36PM by PIB Chennai

உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு, தரம் குறித்த நுகர்வோர் விழிப்புணர்வுக்கான வாடகைக் கார் (Call Taxi) பேரணியை இந்திய தர நிர்ணய அமைவனம் சென்னையில் இன்று நடத்தியது.

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 15 உலக நுகர்வோர் உரிமைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு, பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை சந்தித்து தரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை இந்திய தர நிர்ணய அமைவனம் தொடர்ந்து நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னையில் கார் பேரணிக்கு ஏற்பாடு செய்து நடத்தியது. இந்தப் பேரணியை இன்று (13 மார்ச் 2024) இந்திய தர நிர்ணய அமைவனத்தின் தென்மண்டல துணைத் தலைமை இயக்குநர் திரு யுஎஸ்பி யாதவ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் சுமார் 40 வாடகைக் கார்கள் (கால் டாக்ஸிகள்) பங்கேற்றன. வாடகைக் கார்களில் தரம் குறித்த நுகர்வோர் விழிப்புணர்வு வாசகங்கள் இடம்பெற்றன. வாடகைக் கார்கள் மூலமான நுகர்வோர் விழிப்புணர்வு பிரச்சாரம் ஒரு மாத காலத்திற்கு நடைபெறும்.

இந்நிகழ்ச்சியில் இந்திய தர நிர்ணய அமைவனத்தின் சென்னை கிளை அலுவலக இயக்குநர் மற்றும் தலைவர் திருமதி ஜி. பவானி மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

   

 

   

***

AD/KRS


(வெளியீட்டு அடையாள எண்: 2014312) வருகையாளர் எண்ணிக்கை : 117
இந்த வெளியீட்டை படிக்க: English