சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

ஐஐடி மெட்ராஸ், பூமிக்கு அப்பால் உற்பத்திக்கான ஆராய்ச்சிகளை முன்னெடுத்துச் செல்ல வெலான் ஸ்பேஸ் என்ற இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறது

Posted On: 11 MAR 2024 3:53PM by PIB Chennai

பூமியின் சுற்றுவட்டப் பாதை நுண்ணீர்ப்பு விசை ஆராய்ச்சியில் இந்த ஒத்துழைப்பு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிப்பதாக அமைந்துள்ளது. வெலான் ஸ்பேஸ் நிறுவனத்தின் ஆஸ்டெரிக்ஸ் லேப்எனப்படும் விண்வெளி ஆய்வகத்தின் மினியேச்சர் குறித்து புவிவட்டப்பாதையில் செயல்விளக்கத்தைக் காட்ட அந்நிறுவனத்திற்கு ஐஐடி மெட்ராஸ் தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியை வழங்கும்.

பூமிக்கு அப்பால் உற்பத்திஎனப்படும் ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சி மையம் வெலான் ஸ்பேஸ் நிறுவனத்தின் செயல்விளக்கப் பணியில் சோதனைமுயற்சி வாடிக்கையாளராக செயல்படுகிறது. உயிரியல் பரிசோதனைகளை நடத்துவதற்கான விண்வெளித் தகுதி குறிப்பாக குறைந்த புவி நுண்ணீர்ப்பு விசையில் நீண்டநேர செல் வளர்ப்பு குறித்து ஆஸ்டரிக்ஸ்ஆய்வகம் செயல்விளக்கப் பணிகளை மேற்கொள்ளும். இந்தச் செயல்விளக்கம் விண்வெளியில் 2025-ம் ஆண்டில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திட்டத்தின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்த ஐஐடி மெட்ராஸ் இயந்திரப் பொறியியல் துறை பேராசிரியரும், எக்ஸ்டெம்-ஐஐடி மெட்ராஸ் ஒருங்கிணைப்பாளருமான சத்யன் சுப்பையா கூறும்போது, “விண்வெளியில் உயிரி உற்பத்திக்காக நடைபெறும் இந்த செயல்விளக்கமானது செல் வளர்ப்பு மற்றும் மருந்து தயாரிப்பில் திருப்புமுனையை ஏற்படுத்தும். மருந்து தயாரிப்புத் துறையும், மனித ஆரோக்கியமும் மேம்பட இது வழிவகுக்கும்எனத் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் கள நிபுணரான ஐஐடி மெட்ராஸ் உயிரித் தொழில்நுட்பத் துறை பேராசிரியரும், இரண்டாம் நிலை எக்ஸ்டெம்-ஐஐடி மெட்ராஸ் இணை முதன்மை ஆய்வாளருமான சுரேஷ்குமார் கூறுகையில், “விண்வெளியில் உயிரியல் செயல்விளக்கத் திறனை வெளிப்படுத்துவதில் பங்களிப்பை வழங்குவது திருப்தி அளிக்கிறது. பூமியில் பயன்படுத்தவோ அல்லது விண்வெளிப் பயணங்களின்போது பயன்படுத்தவோ தேவையான சிறந்த தயாரிப்புகளுக்கு அவர்கள் பங்களிப்பை வழங்குகின்றனர். இந்த ஒத்துழைப்பின் வாயிலாக உயிரியல் அமைப்புகளில் நுண்ணீர்ப்பு விசையின் விளைவுகளைப் புரிந்து கொள்வதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களையும், மருந்து உற்பத்தி செயல்முறைகளில் புதுமைகளையும், விண்வெளித் தொழில்நுட்பத் துறையில் வணிக வாய்ப்புகளையும் உருவாக்க முடியும்எனக் குறிப்பிட்டார்.

ஐஐடி மெட்ராஸ், வெலான் ஸ்பேஸ் ஆகியவற்றுக்கு இடையிலான இந்த ஒத்துழைப்பு, புதுமை மற்றும் தொலைநோக்குப் பார்வையைப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. விண்வெளித் தொழில்நுட்பம், மனிதத்துவ ஆய்வு ஆகியவற்றின் முழுத் திறனையும் வெளிக் கொணர்ந்து புதிய வரலாற்றுக்கு இட்டுச் செல்வது நிச்சயம். 

***

AD/PKV/KV


(Release ID: 2013405)
Read this release in: English