சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

பூரி கடற்கரையில் சுதர்சன் பட்நாயக்கின் மணல் சிற்பம் "எனது முதல் வாக்கு நாட்டிற்காக" பிரச்சாரத்தின் ஒரு புதிய பரிமாணத்தை அளிக்கிறது

प्रविष्टि तिथि: 10 MAR 2024 3:17PM by PIB Chennai

எனது முதல் வாக்கு நாட்டிற்காக பிரச்சாரம் நாடு முழுவதும் வேகம் பெற்று வரும் நிலையில், புகழ்பெற்ற மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் ஒடிசாவின் பூரி கடற்கரையில் மணல் சிற்பத்தை உருவாக்கியுள்ளார். தனது கலைப்படைப்பு மூலம், இளைஞர்கள் மற்றும் முதல் தலைமுறை வாக்காளர்கள் அதிக அளவில் வாக்களித்து நமது ஜனநாயகத்தை வளப்படுத்துவதுடன் வலுப்படுத்துமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பட்நாயக்கின் கலைப்படைப்புக்கு மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் பாராட்டு தெரிவித்துள்ளார். "மணலில் மேற்கொள்ளப்பட்ட படைப்பு, ஆனால் ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் உணர்வை ஏற்படுத்தியுள்ளது" என மத்திய அமைச்சர் தனது எக்ஸ் பதிவில் கூறியுள்ளார்.

"#எனதுமுதல்வாக்குநாட்டிற்காக பிரச்சாரம் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சென்றடைந்துள்ளது, ஜனநாயக செயல்பாட்டின் ஒரு பகுதியாக திகழும், முதன்முறை வாக்காளருக்கு ஈடு இணையற்ற உற்சாகத்தை இது நிரப்புகிறது, இந்த பிரச்சாரத்தின் அழகான வெளிப்பாடு மணலில் பொறிக்கப்பட்டிருப்பதைக் காண்கிறோம்." என்றும் மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தமது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.

“நாட்டிற்கான எனது முதல் வாக்கு " என்ற பிரச்சாரம் நாட்டின் பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களிலும் மேற்கொள்ளப்படுகிறது.  இளம் வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்க ஊக்குவிப்பதும், நீண்டகால நன்மைக்காக வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை தெரிவிப்பதும் இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாகும். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் தேர்தலின் முக்கியத்துவத்தையும் வாக்களிப்பதன் பெருமையையும் இந்த முயற்சி அடையாளப்படுத்துகிறது.

***

AD/BS/DL


(रिलीज़ आईडी: 2013210) आगंतुक पटल : 124
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English