சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

மதுரை ரயில் நிலையம் மற்றும் சென்னையில் ரூ.180 கோடி மதிப்புள்ள 36 கிலோ மெத்தாம்ஃபேட்டமைன் போதைப்பொருளை வருவாய் புலனாய்வுத்துறை பறிமுதல் செய்துள்ளது

Posted On: 01 MAR 2024 5:58PM by PIB Chennai

சென்னை மண்டல வருவாய் புலனாய்வு இயக்குநரக (டிஆர்ஐ) அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது மதுரை ரயில் நிலையம் மற்றும் சென்னை கொடுங்கையூர் குப்பை கிடங்கில் சுமார் ரூ. 180 கோடி மதிப்புள்ள 36 கிலோ மெத்தாம்ஃபேட்டமைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

29.02.2024 அன்று சென்னையிலிருந்து மதுரைக்கு பொதிகை விரைவு ரயில் சென்றது. இதில் போதைப் பொருள்  கொண்டு செல்லப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வருவாய் புலனாய்வுத் துறையினர் 01.03.2024  அன்று காலை ரயில் மதுரையை அடைந்ததும் சோதனை மேற்கொண்டனர்.

சம்பந்தப்பட்ட பயணி அடையாளம் காணப்பட்டு அவரது உடமைகளை பரிசோதித்ததில், மொத்தம் 30 கிலோ எடையுள்ள 15 பாக்கெட்டுகளில் வெள்ளை நிற பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது மெத்தாம்ஃபேட்டமைன் என்று கண்டறியப்பட்டு அது பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக அந்த பயணி மற்றும் அவரது மனைவி இருவரும்  காவலில்  வைக்கப்பட்டுள்ளனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சென்னையில் உள்ள அவரது வீட்டில் மேலும் சில மெத்தாம்ஃபேட்டமைன் பாக்கெட்டுகள் வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து,  சென்னையில் சோதனையிட்டபோது, மொத்தம் 6 கிலோ எடையுள்ள 3 பாக்கெட்டுகளில்  இருந்த போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருளின் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் ரூ.180 கோடியாகும்.  இது தொடர்பாக அந்த  பயணி மற்றும் அவரது மனைவி இருவரும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

 

 

***

PLM/AG/KRS



(Release ID: 2010700) Visitor Counter : 150


Read this release in: English