சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சர்வதேச புலிகள் கூட்டமைப்பு அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 29 FEB 2024 3:34PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 2023-24 முதல் 2027-28 வரையிலான ஐந்தாண்டு காலத்திற்கு ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடுடன் இந்தியாவில் தலைமையிடமாகக் கொண்ட சர்வதேச புலிகள் கூட்டமைப்பு அமைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

புலிகள் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள புலிகளின் அரிய வகை இனங்களை பாதுகாப்பதில் இந்தியாவின் முன்னணி பங்கை ஒப்புக் கொண்ட பிரதமர், 2019 உலகளாவிய புலிகள் தினத்தை முன்னிட்டு தனது உரையின் போது, ஆசியாவில் புலிகள் வேட்டையாடப்படுவதைத் தடுக்க உலகத் தலைவர்களின் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்தார். ஏப்ரல் 9, 2023 அன்று இந்தியாவின் புராஜெக்ட் டைகரின் 50 ஆண்டுகளை நினைவுகூரும் நிகழ்ச்சியில் அவர் இதை மீண்டும் வலியுறுத்தினார், மேலும் புலிகள் மற்றும் அவை செழித்து வளரும் நிலப்பரப்புகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட சர்வதேச புலிகள் கூட்டமைப்பைத் தொடங்குவதாக முறையாக அறிவித்தார். இந்தியாவில் உருவாக்கப்பட்ட முன்னோடியான புலிகளை பாதுகாப்பதற்கான நல்ல நடைமுறைகள் பல நாடுகளிலும் பின்பற்றப்படலாம்.

புலி, சிங்கம், சிறுத்தை, பனிச்சிறுத்தை, பூமா, ஜாகுவார் மற்றும் சிறுத்தை உள்ளிட்ட ஏழு பெரிய புலி இனங்கள் இந்தியாவில் காணப்படுகின்றன.

 

சர்வதேச புலிகள் கூட்டமைப்பு  என்பது  புலிகள் வசிக்கும் 96 நாடுகள், புலிகள் பாதுகாப்பில் ஆர்வமுள்ள பிற நாடுகள், பாதுகாப்பு கூட்டாளர்கள் மற்றும் புலிகள் பாதுகாப்புத் துறையில் பணிபுரியும் அறிவியல் அமைப்புகள் மற்றும் வணிகக் குழுக்கள் மற்றும் புலிகளின் பாதுகாப்புக்காக பங்களிக்க தயாராக உள்ள பெருநிறுவனங்கள் ஆகியவற்றைக் கொண்ட பல நாடுகள், பல முகமைகளுடன் கூடிய கூட்டமைப்பாக உருவாக்கப்பட்டுள்ளது.  

***

ANU/AD/BS/RS/DL


(Release ID: 2010375) Visitor Counter : 136