சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

புதுதில்லியில் நடைபெறவுள்ள தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழாவில் பங்கேற்க தமிழ்நாட்டின் மூன்று இளைஞர்கள் தேர்வு

இடுகை இடப்பட்ட நாள்: 26 FEB 2024 3:49PM by PIB Chennai

மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் சார்பில் 5-வது தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழா புதுதில்லியில் உள்ள சம்விதன் சதன் எனப்படும் பழைய நாடாளுமன்ற கட்டடத்தின்  மைய மண்டபத்தில் மார்ச் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.  நேரு யுவ கேந்திரா சார்பில் காணொலிக் காட்சி மூலம் நடத்தப்பட்ட மாநில அளவிலான போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்கள் தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழாவில்  பங்கேற்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

 

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த செல்வி வைஷ்ணபிச்சை, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த திரு.பி.அரவிந்த், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த செல்வி மரியா ஸ்னோலின் ராஜேஷ்குமார் ஆகியோர் மாநில அளவிலான போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்த மூன்று இளைஞர்களும் தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழாவில் கலந்து கொள்வார்கள்.

 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான நேரு யுவ கேந்திராவின் மாநில இயக்குநர் திரு.கே.குன்ஹம்மது, மாநில இளைஞர் நாடாளுமன்றப் போட்டியைத் தொடங்கி வைத்தார். இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மாவட்ட அளவிலான போட்டிகளில் 65 இளைஞர்கள் கலந்து கொண்டனர். முன்னணி கல்வியாளர்கள் இப்போட்டியின் நடுவர்களாக செயல்பட்டனர்.

 

 

***************

PKV/PLM/KRS


(வெளியீட்டு அடையாள எண்: 2009159) வருகையாளர் எண்ணிக்கை : 127
இந்த வெளியீட்டை படிக்க: English