சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
பிஎஸ்என்எல்-லின் டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக காப்பர் வயர் லைன் சேவையை ஃபைபர் சேவையாக மாற்றும் நடவடிக்கைகள்
Posted On:
21 FEB 2024 7:00PM by PIB Chennai
பிஎஸ்என்எல் தமிழ்நாடு வட்டம் அதன் ஃபைபர் டு தி ஹோம் (FTTH) தொழில்நுட்பத்தின் ஃபைபர் இணைய சேவைகளில் புரட்சியை ஏற்படுத்துவதில் முன்னணியில் உள்ளது. எஃப்டிடிஹெச் சேவையானது 30 Mbps முதல் 300 Mbps வரையிலான அதிவேக அன்லிமிடெட் டேட்டாவை வழங்குகிறது, அத்துடன் அளவில்லா வாய்ஸ் அழைப்புகள் மற்றும் சிறந்த தரமான சேவைகளை (QoS) வணிக நிறுவனம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள பல்வேறு வாடிக்கையாளர் தேவைகளுக்கு ஏற்றவாறு வழங்குகிறது. வேல்யூ ஆடட் சேவைகளாக ஓடிடி சேனல்களை, அனைத்து பயனர்களுக்கும் வழங்குவதன் மூலம் டிஜிட்டல் அனுபவத்தை பிஎஸ்என்எல் உறுதி செய்கிறது.
சுமார் 4.6 லட்சம் எஃப்டிடிஹெச் இணைப்புகளைக் கொண்டு, பிஎஸ்என்எல் தொலைதூர கிராமப் பகுதிகள் மற்றும் சவாலான நிலப்பரப்புகள் உட்பட தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தனது நெட்வொர்க்கை வெற்றிகரமாக விரிவுபடுத்தியுள்ளது.
டிஜிட்டல் மயமாக்குதல் என்ற தொலைநோக்கு பார்வையுடன் பிஎஸ்என்எல் தமிழ்நாட்டில் பிஎஸ்என்எல் மிஷன் மோட் ஃபைபர் மயமாக்கும்" திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இந்த முன்னோடி முயற்சியானது தற்போதைய அனைத்து காப்பர் லேண்ட்லைன் மற்றும் பிராட்பேண்ட் இணைப்புகளை ஆறு மாத காலத்திற்குள் அதிவேக ஃபைபர் இணைப்புகளுக்கு மாற்ற இருக்கிறது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு வட்டத்தில் உள்ள சுமார் 1.2 லட்சம் காப்பர் இணைப்புகள் ஃபைபராக மாற்றப்பட்டு, மாநிலம் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு அதிவேக இணைய சேவை மற்றும் பழுதற்ற இணைப்பை உருவாக்கும்.
இந்த மாற்றத்தின் ஒரு பகுதியாக, வாடிக்கையாளர்கள் ஒரு இலவச ஆப்டிகல் ஃபைபர் மோடத்தைப் பெறுவார்கள். இதற்கு நிறுவுதல் கட்டணங்கள் ஏதும் விதிக்கப்படமாட்டாது. மேலும், வாடிக்கையாளர்கள் தங்களுடைய தற்போதைய தொலைபேசி எண்களைத் தக்கவைத்துக்கொள்ள முடியும்.
பிஎஸ்என்எல் எஃப்டிடிஹெச் திட்டங்கள் பல்வேறு தேவைகளுக்கு ஏற்ப தீர்வுகளை வழங்குகின்றன. வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வேகம் உள்ள திட்டங்கள், ஓடிடி மற்றும் ஸ்டேட்டிக் ஐடி போன்ற கூடுதல் சேவைகளை வழங்குகிறது. ஒவ்வொரு திட்டத்திலும் அளவில்லா விஓஐபி (வாய்ஸ்) சேவை வழங்கப்படுகிறது. விருப்பத்தேர்வுகள் 30Mbps ரூ.399/ முதல் 300 Mbps ரூ. 1799 வரை உள்ளன. ரூ.599/-க்கு மேல் உள்ள எஃப்டிடிஹெச் மாதாந்திர திட்டங்களுக்கு ஸ்டேட்டிக் ஐபி குறைந்த கட்டணத்தில் கிடைக்கும். குறைந்ந செலவில் திட்டங்கள் எதிர்பார்க்கும் பயனர்களுக்கு, கிராமப்புறங்களில் ரூ.249 மற்றும் நகர்ப்புறங்களில் ரூ.299 முதல் 10 Mbps வேகத்துடன் கூடிய திட்டங்கள் உள்ளன. இதில் அளவில்லா விஓஐபி (வாய்ஸ்) சேவை கூடுதலாக வழங்கப்படுகிறது.
பிஎஸ்என்எல் தமிழ்நாடு வட்டம், அதன் மதிப்பிற்குரிய காப்பர் வாடிக்கையாளர்களை, அருகிலுள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் அல்லது வாடிக்கையாளர் சேவை மையத்திற்குச் சென்று, தங்கள் லேண்ட்லைன் சேவையை ஃபைபராக மேம்படுத்துவதற்கான பொன்னான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
*********
PLM/RS/DL
(Release ID: 2007809)
Visitor Counter : 228