சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
தமிழ்நாடு அரசின் நிதிக் கணக்குகள் மற்றும் நிதி ஒதுக்கக் கணக்குகள் குறித்த அறிக்கையை மாநில அரசுக்கு அனுப்பியது சிஏஜி அலுவலகம்
இடுகை இடப்பட்ட நாள்:
21 FEB 2024 5:23PM by PIB Chennai
2022-23 ஆம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் வரவு, செலவு மற்றும் நிதி ஒதுக்கீடு குறித்த தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியின்( சிஏஜி) அறிக்கைகள் மாநில அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இதுகுறித்து சிஏஜி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியின் (கடமைகள், அதிகாரங்கள் மற்றும் பணி நிலைகள்) சட்டம் 1971ன் கீழ் வருடாந்தர வருவாய் மற்றும் செலவினங்களைக் காட்டும் தமிழ்நாடு அரசின் நிதிக் கணக்குகளை இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி தயாரித்துள்ளார். இத்துடன் சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட துறைவாரியான மானியம் அல்லது நிதி ஒதுக்கத்தின் கீழ் கூடுதல் செலவு அல்லது சேமிப்பு விவரங்களைக் குறிப்பிடும் நிதி ஒதுக்கக் கணக்குகளையும் மாநில அரசுக்காக இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி தொகுத்துள்ளார்.
2022-23 ஆம் ஆண்டுக்கான இரு கணக்குகளும் இந்தியத் தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரியால் கையொப்பம் இடப்பட்டு மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்வதற்காக மாநில அரசுக்கு இன்று (21.02.2024) அனுப்பப்பட்டு உள்ளன.
இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


*********
(வெளியீட்டு அடையாள எண்: 2007761)
வருகையாளர் எண்ணிக்கை : 111