சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
வருமான வரித்துறை (தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி) மண்டலத்தில், இந்நிதியாண்டில் (2023-24) வருமான வரிச் சட்டம், 1961ன் விதிகளை மீறிய குற்றத்திற்காக தொடரப்பட்ட வழக்கில் ஒன்பதாவது முறையாக தண்டனை வழங்கப்பட்டது.
Posted On:
09 FEB 2024 7:05PM by PIB Chennai
வருமான வரித்துறை (தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி) மண்டலத்தில், வருமான வரிச் சட்டம், 1961ன் விதிகளை மீறிய குற்றத்திற்காக தொடரப்பட்ட வழக்கில், ஒரு தனி நபர் குற்றம் நிரூபிக்கப்பட்டு இந்நிதியாண்டில் (2023-24) ஒன்பதாவது முறையாக தண்டனை வழங்கப்பட்டது. வருமான வரிச்சட்டம், 1961, பிரிவு 276CCஇன் கீழ் வேண்டுமென்றே வருமான வரிப்படிவம் தாக்கல் செய்யத் தவறியதற்காக, சென்னை, கூடுதல் முதன்மை பெருநகர நீதிபதி (பொருளாதார குற்றங்கள் - II) அவர்களால் திரு. எஸ். சுரேஷ் பாபு என்ற தனி நபர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது
- ஆண்டு 2012-13க்கு தொடர்புடைய மதிப்பீட்டு ஆண்டு 2013-14ஆம் ஆண்டிற்கான வாடகை வருமானம் ரூ.1,25,73,636/-மும் மற்றும் தன்னுடைய இள வயது மகனின் வட்டி வருமானமான ரூ 32,736/-ஐ தன்னுடைய வருமானத்துடன் இணைத்து, உரிய வருமான வரிப் படிவத்தை தாக்கல் செய்யத் தவறியதால், சென்னை, பொருளாதார குற்றவியல் நீதிமன்றம்-II இல் 2017 ஆம் ஆண்டு வருமான வரித் துறையால் மேற்கண்ட வரி விதிப்பிற்கு உரியவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது. வருமான வரிச் சட்டம், 1961, பிரிவு 139(1)இன் படி குறிப்பிட்ட தேதிக்குள் வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 64(1A)இன் வருமானத்தை இணைத்தல் விதிகளின்படி, மேற்கண்ட வருமானத்தை ஒப்புக்கொண்டு, வரி விதிப்புக்குரியவர் தனது வருமான வரிப்படிவத்தை தாக்கல் செய்திருக்க வேண்டும். வரிவிதிப்புக்கு உரிய நபர் செய்த குற்றத்தை கவனத்தில் கொண்டு மாண்புமிகு கூடுதல் முதன்மை பெருநகர நீதிபதி (பொருளாதார குற்றங்கள் - II) நீதிமன்றம் குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது.
அரசுத் தரப்பில் பதிவு செய்யப்பட்ட சாட்சியங்களை விசாரித்த பின்னர், சென்னை, பொருளாதார குற்றங்கள்-II, மாண்புமிகு கூடுதல் முதன்மை பெருநகர நீதிபதி, 03.02.2024 தேதியிட்ட உத்தரவின்படி, குற்றம் சாட்டப்பட்டவர் வருமான வரிச் சட்டம் 1961இன், பிரிவு 276CCஇன் படி மதிப்பீட்டு ஆண்டு 2013-14 ஆண்டிற்கான வருமான வரிப்படிவத்தை தாக்கல் செய்யத் தவறியதற்காக வரி விதிப்புக்கு உரியவருக்கு எதிராக சந்தேகத்திற்கு இடமில்லாமல்குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவரை குற்றவாளி என தீர்மானித்து தீர்ப்பளித்தார். சிறப்பு அரசு வழக்கறிஞர் திரு. எல். முரளிகிருஷ்ணன், இந்த வழக்கில் அரசுத் துறையின் சார்பில் ஆஜரானார்.
வரிவிதிப்புக்கு உரியவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு, வருமான வரிச்சட்டம், 1961 இன் பிரிவு 276CC-ன் படி நிருபிக்கப்பட்ட குற்றத்திற்காக, ஓர் ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை, மற்றும் ரூ.25,000/- அபராதம் விதிக்கப்பட்டது.
(Release ID: 2004629)
Visitor Counter : 48