சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
இந்திய சர்வதேச தோல் கண்காட்சி 2024, சிஎஸ்ஐஆர்-சிஎல்ஆர்ஐ தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் முக்கிய சேவைகளை திட்டமிடுகிறது
Posted On:
03 FEB 2024 5:12PM by PIB Chennai
சென்னையில் பிப்ரவரி 1-3 தேதிகளில் நடைபெற்ற 37வது இந்திய சர்வதேச தோல் கண்காட்சி 2024 இல், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில்(சிஎஸ்ஐஆர்)-மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை தொழில்நுட்ப வழங்கல், ஆலோசனை சேவைகள், மனித வள மேம்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் சோதனை மற்றும் தர உத்தரவாத சேவைகள் ஆகிய நான்கு முக்கியமான களங்கள் மற்றும் நிபுணத்துவத்தை வழங்கியது.
சிஎஸ்ஐஆர்-சிஎல்ஆர்ஐ இயக்குநர் டாக்டர் கே.ஜே.ஸ்ரீராம் பேசுகையில், தோல், தோல் ரசாயனங்கள், தோல் பொருட்கள், சுற்றுச்சூழல் தொழில்நுட்பம், தூய்மையான உற்பத்தி போன்ற துறைகளில் தொழில்நுட்ப வளர்ச்சியில் சிஎஸ்ஐஆர்-சிஎல்ஆர்ஐ உலக அளவில் முன்னோடியாக திகழ்கிறது என்றார்.
தோல் பொருட்களின் தயாரிப்பை பொறுத்தவரை, இந்த நிறுவனம் அறிவுசார் தயாரிப்புகளை வழங்குவதில் முன்னணியில் உள்ளது. தொழில்நுட்பங்கள் ஒரு வலுவான செயல்முறையின் மூலம் உருவாக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு, தொழில்துறைக்கு தயாராக இருப்பது சரிபார்க்கப்படுகிறது. மேலும், தோல் மற்றும் அதனுடன் தொடர்புடைய பகுதிகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை வழிகளில் ஆலோசனை சேவைகளை வழங்குவதில் நிறுவனத்துக்கு நிபுணத்துவம் உள்ளது என்று அவர் கூறினார்.
சி.எஸ்.ஐ.ஆர்-சி.எல்.ஆர்.ஐ மனிதவள மேம்பாட்டின் முக்கிய மையமாக இருந்து பல்வேறு நிலைகளில் திறமையான மற்றும் அறிவுசார் பணியாளர்களை உருவாக்குகிறது. தோல் விநியோகச் சங்கிலியுடன் இணைக்கப்பட்ட பெரும்பாலான தொழில்துறை அலகுகள் சிஎஸ்ஐஆர்-சிஎல்ஆர்ஐ-ல் உருவாக்கப்பட்டவர்களால் நிர்வகிக்கப்படுகின்றன.
தோல், தோல் பொருட்கள், தோல் அல்லாத காலணிகள் மற்றும் தயாரிப்புக்கான அதன் கூறுகளின் உடல், வேதியியல் மற்றும் உயிரியல் அளவுருக்களை சோதிக்க சி.எஸ்.ஐ.ஆர்-சி.எல்.ஆர்.ஐ ஒரு அதிநவீன வசதி மையத்தை இயக்கி வருகிறது.
இந்திய சர்வதேச தோல் கண்காட்சி 2024 இன் போது, சிஎஸ்ஐஆர்-சிஎல்ஆர்ஐ பல்வேறு தயாரிப்புகளை 'எதிர்காலத்தின் தோல் பதனிடுதல்' மென்பொருள் குறித்த கலந்துரையாடலுடன் கூடிய நிகழ்ச்சியை நடத்தியது. இது விரிவான நிலைத்தன்மையை அடைவதற்கான உத்திப்பூர்வ வழிகள் மற்றும் தொழில்நுட்ப விருப்பங்களை வழங்குகிறது. இந்திய சர்வதேச தோல் கண்காட்சி 2024 இன் போது, சிஎஸ்ஐஆர்-சிஎல்ஆர்ஐ அமைப்பானது குரோம் தோல் பதனிடுதலுக்கான பொருளை மதிப்பீடு செய்வதற்காக ஹைதராபாத்தில் உள்ள விஷ்ணு கெமிக்கல்ஸ் நிறுவனம் மற்றும் நவி மும்பையில் உள்ள அல்லனசன்ஸ் பிரைவேட் நிறுவனத்துடன் மாசு குறைப்புக்காகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
சிஎஸ்ஐஆர்-சிஎல்ஆர்ஐ-இந்த கண்காட்சியின் என்ஐடி, டிபிஐஐடி மற்றும் சிஎல்இ ஆகியவற்றுடன் இணைந்து பிப்ரவரி 2ஆம் தேதி வடிவமைப்பு பட்டறையை நடத்தியது. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து வடிவமைப்பாளர்கள் மற்றும் தொழில்துறை தலைவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அவர்கள் பகிர்ந்துகொண்ட கண்ணோட்டங்கள், கற்றல் மற்றும் அனுபவங்கள் பங்கேற்பாளர்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக இருந்தன. வடிவமைப்பு பயிலரங்கில் தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


***
ANU/PKV/BS/DL
(Release ID: 2002280)
Visitor Counter : 146