சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

பாதுகாப்புத் தொடர்பான கொழும்பு மாநாடு குறித்த பத்திரிகை செய்தி – 2 வது பெருங்கடல் மற்றும் நீரியல் ஆய்வாளர்கள் மாநாடு

Posted On: 31 JAN 2024 4:42PM by PIB Chennai

பாதுகாப்பு தொடர்பான கொழும்பு மாநாட்டில் பெருங்கடல் மற்றும் நீரியல் ஆய்வாளர்கள் பங்கேற்கும் இரண்டாவது மாநாடு தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனத்தில்  2024 ஜனவரி 29 அன்று சென்னையில் தொடங்கியது.

இந்த மாநாடு சென்னை மற்றும் ஹைதராபாத் நகரங்களில் 2024, ஜனவரி 29 முதல் 31 வரை மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது. இம்மாநாட்டின் தொடக்க அமர்வை சென்னையில் தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் (என்ஐஓடி) மற்றும் தேசிய கடலோர ஆராய்ச்சி மையம் (என்.சி.சி.ஆர்) ஏற்பாடு செய்துள்ளது.

கொழும்பு பாதுகாப்பு மாநாட்டில் (சி.எஸ்.சி.யின்) உறுப்பு நாடுகள் மற்றும் பார்வையாளர்கள் நாடுகளின் கடலியல் மற்றும் நீரியல் ஆ்யவு  நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டில் பெருங்கடல் மற்றும் நீரியல் துறைகளில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஒத்துழைப்பிற்கான  நடவடிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டதுடன், ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான உறுதியான செயல்திட்டமும்  வகுக்கப்பட்டது. CSIR- தேசிய கடல்சார் நிறுவனம் (NIO), துருவ மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சிக்கான தேசிய மையம் (NCPOR) மற்றும் கோவாவில் உள்ள தேசிய நீரியல் நிறுவனம் (NIH), பெருங்கடல் தகவல் தொடர்பு சேவைகளுக்கான இந்திய தேசிய மையம் (INCOIS) ஆகியவை இணைந்து 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற கடலியல் மற்றும் நீரியல் மாநாட்டின் முந்தைய பதிப்பின் போது வெளியிடப்பட்ட 'நமது பெருங்கடல் நமது எதிர்காலம்' என்ற கருப்பொருளில்  ஹைதராபாத்தில் நடைபெற்ற இம்மாநாட்டில் உறுப்பு நாடுகள் விரிவாக விவாதித்தன.

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கூட்டு நடவடிக்கை, அண்டார்டிகா பிராந்தியத்தில் கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் உறுப்பு நாடுகளுக்கு நடவடிக்கைகள் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்துறை குழுமம் (சிஎஸ்ஐஆர்) –கடல் சார் தேசிய நிறுவனம் ஆகியவற்றால் மேற்கொள்ளப்பட்டு பயிற்சி திட்டங்களை உள்ளடக்கிய முதலாவது மாநாட்டில் இருந்து கணிசமான முன்னேற்றத்தை அடைந்துள்ளன.

பெருங்கடல் மற்றும் நீரியல் ஆய்வாளர்கள் பங்கேற்கும் இரண்டாவது மாநாட்டை தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின்   (என்.ஐ.ஓ.டி) இயக்குநர் டாக்டர் ஜி.ஏ. ராமதாஸ் தொடங்கி வைத்தார். இம்மாநாட்டில் பங்களாதேஷ், மொரீஷியஸ், செஷல்ஸ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். எரிசக்தி மற்றும் கடல்நீரைக் குடிநீராக்குதல், கடலோரப் பொறியியல், ஆழ்கடல் தொழில்நுட்பம், கடல்சார் உயிரி தொழில்நுட்பம், பெருங்கடல் கண்காணிப்பு மற்றும் பெருங்கடல் ஒலியியல் ஆகிய துறைகளில் மேற்கொளள்ளப்பட்டுவரும் திட்டங்களை தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவன இயக்குநர் டாக்டர் ஜி.ஏ. ராமதாஸ் விரிவாக எடுத்துரைத்தார். கடலோர ஆராய்ச்சிக்கான தேசிய  மையத்தின் இயக்குநர் டாக்டர் எம்.வி .ரமணமூர்த்தி, கடல்சார் மேலாண்மை, கடல் மாசுபாடு மற்றும் நுண்ணிய நெகிழி பொருட்கள் போன்ற துறைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களை எடுத்துக்கூறினார்

கொழும்பு பாதுகாப்பு மாநாட்டு குழும நாடுகளின் பிரதிநிதிகள் கடல்சார் மற்றும் நீரியல் ஆய்வு தொடர்பான தங்களது அனுபவங்கள் மற்றும் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து விளக்கினர்.

கடல்நீரைக் குடிநீராக்குதல், நீடித்த கடலோர மேலாண்மை, பெருங்கடல் கண்காணிப்பு மற்றும் திறன் மேம்பாடு ஆகிய துறைகளில் கூட்டு ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்தும் அவர்கள் விரிவாக எடுத்துரைத்தனர்.

மாநாட்டின் இரண்டாம் நாளில், தூதுக்குழுவினர் கல்பாக்கத்தில் உள்ள உயர் அதிர்வெண் (எச்.எஃப்) அலைவரிசையுடன் கூடிய ரேடார் தளத்தை பார்வையிட்டனர். இறுதியாக ஹைதராபாத்தில் உள்ள இந்திய தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையத்தில் இம்மாநாடு நிறைவடையும்.

  

 

***

AD/SV/RS/RR


(Release ID: 2000880) Visitor Counter : 109


Read this release in: English