குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

அமிர்த உத்யான் பகுதிக்கு பிப்ரவரி 2 முதல் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர்

Posted On: 20 JAN 2024 1:01PM by PIB Chennai

குடியரசுத்தலைவர் மாளிகை வளாகத்தில் உள்ள அமிர்த உத்யான் பகுதி பிப்ரவரி 2 முதல் மார்ச் 31,  வரை உத்யான் விழா-1, 2024 இன் கீழ் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படும். பராமரிப்பு நாட்களான திங்கட்கிழமைகளைத் தவிர வாரத்தில் ஆறு நாட்களும் மக்கள் உத்யான் பகுதியை பார்வையிடலாம்.

அமிர்த உத்யான் பின்வரும் நாட்களில் சிறப்பு பிரிவை சேர்ந்தவர்களுக்கு திறக்கப்படும்:

 

        பிப்ரவரி 22: மாற்றுத்திறனாளிகள் அனுமதிக்கப்படுவர்

 

        பிப்ரவரி 23 – பாதுகாப்பு, துணை ராணுவம் மற்றும் காவல் படையினர் அனுமதிக்கப்படுவர்

 

        மார்ச் 1 – மகளிர் மற்றும் பழங்குடியின மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்தோர் அனுமதிக்கப்படுவர்

 

        மார்ச் 5 - ஆதரவற்றோர் இல்லக் குழந்தைகளுக்கு பார்வையிட அனுமதி வழங்கப்படும்.

பார்வையாளர்கள் காலை 10 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை தலா ஒவ்வொரு மணி நேரம் ஆறு மணி நேரம் பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள்.

முற்பகலில் நண்பகல் 1200 மணி வரை தலா 1 மணி நேரம் வீதம் 2 மணிநேரத்தில் வார நாட்களில் 7,500 பார்வையாளர்களும், வார இறுதி நாட்களில் 10,000 பார்வையாளர்களும் அனுமதிக்கப்படுவர்.

 

 நண்பகல் 1200 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை தலா ஒவ்வொரு மணி நேரம் வீதம் 4/மணி நேரத்துக்கு 5,000 பார்வையாளர்களும், வார இறுதி நாட்களில் 7,500 பார்வையாளர்களும் அனுமதிக்கப்படுவர். 

முன்பதிவு செய்ய இந்த இணையதள இணைப்பை காணவும்:  https://visit.rashtrapatibhavan.gov.in/visit/amrit-udyan/rE

பார்வையாளர்கள்  கவுண்டர்களிலும் , குடியரசுத்தலைவர் மாளிகையின் 12ம் எண் நுழைவாயில் அருகிலுள்ள சுய சேவை பிரிவிலும் தங்களை பதிவு செய்ய வேண்டும்.

அனைத்து பார்வையாளர்களுக்கும் உள்ளே வரவும் மற்றும் வெளியேறவும்  குடியரசுத்தலைவர் மாளிகை தோட்டத்தின்  35 வது நுழைவு வாயிலை பயன்படுத்த வேண்டும், இது வடக்கு அவென்யூ - குடியரசுத்தலைவர் மாளிகை சந்திக்கும் இடத்திற்கு அருகில் உள்ளது.

பார்வையாளர்களின் வசதிக்காக, மத்திய செயலக மெட்ரோ நிலையத்திலிருந்து நுழைவாயில் எண் 35 வரை ஒவ்வொரு 30 நிமிட இடைவெளியிலும் காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி பேருந்துகள் இயக்கப்படும்.

சுற்றுப்பயணத்தின் போது, பார்வையாளர்கள் போன்சாய் தோட்டம், இசை நீரூற்று, மத்திய புல்வெளி, நீண்ட தோட்டம் மற்றும் வட்ட தோட்டம் வழியாக செல்வார்கள். வெளியேறும் இடத்தில் அவர்களுக்கான உணவகங்கள் அமைக்கப்படும். 

பார்வையாளர்கள் மொபைல் போன்கள், மின்னணு கருவிகள், பர்ஸ் / கைப்பைகள், தண்ணீர் பாட்டில்கள்  மற்றும் குழந்தைகளுக்கான பால் பாட்டில்களை எடுத்துச் செல்லலாம். பொது வழித்தடத்தில் பல்வேறு இடங்களில் குடிநீர், கழிப்பறைகள் மற்றும் முதலுதவி / மருத்துவ வசதிகள் செய்யப்படும்.

*****

ANU/AD/BS/DL


(Release ID: 1998128) Visitor Counter : 105


Read this release in: English , Urdu , Hindi , Marathi