சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
திருச்சிராப்பள்ளி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் ஒரு வாரகாலக் கல்வியாளர் மேம்பாட்டுப் பயிற்சி நடைபெறவுள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
19 JAN 2024 1:13PM by PIB Chennai
தேசிய தொழில்நுட்பக் கழகம் திருச்சிராப்பள்ளியின் மனிதவியல்
மற்றும் சமூகவியல் துறை மற்றும் ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் பாதிப்பு ஆய்வுகளுக்கான யுனெஸ்கோ தலைமையுடன் இணைந்து 'ரீடிங் அண்டு ரிசர்ச்சிங் தி லிட்ரேச்சர் ஆஃப் கிரைசிஸ்' என்ற தலைப்பில் ஒரு வார (22.01.24 - 28.01.24) ஆன்லைன் கல்வியாளர் மேம்பாட்டுப் பயிற்சி நடைபெற இருக்கிறது.
பாதிப்பு ஆய்வுகளின் முக்கியக் கருத்துகளை அடையாளம் காணவும், மனித, மனிதர் அல்லாத மற்றும் உலக பாதிப்புகளை ஆராயும் படைப்புகளைப் பங்கேற்பாளர்கள் புரிந்துகொள்வது இப்பயிற்சியின் நோக்கமாக உள்ளது.
இப்பயிற்சியினை என் ஐ டி இயக்குநர், பேராசிரியர் ஜி. அகிலா, ஹைதராபாத் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர், பி.ஜே. ராவ் ஆகியோர் முன்னிலையில் யுனெஸ்கோவின் புதுதில்லி மண்டல சமூக மற்றும் மனித அறிவியல் அலுவலகத் தலைவர் யூன்சாங் கிம் தொடங்கி வைக்கிறார்.
யுனெஸ்கோ புதுதில்லி மண்டல அலுவலக இயக்குநரும் பிரதிநிதியுமான திரு டிம் கார்ட்டிஸ் தொடக்க உரையாற்றுகிறார்.
பேராசிரியர் பிரமோத் கே. நாயர், யுனெஸ்கோ பாதிப்பு ஆய்வுகளின் தலைவர்
இந்நிகழ்ச்சியை தொடங்கிவைக்கின்றார். பின்வரும் நாட்களை சிறப்பிப்போர்
டாக்டர் சரதிந்து பட்டாச்சார்யா, டாக்டர் அன்னா குரியன், ஹைதராபாத்
பல்கலைக்கழகம், டாக்டர் சாரா ஃபால்கஸ், ஹடர்ஸ்ஃபீல்ட் பல்கலைக்கழகம், டாக்டர் மரியா போராஸ் சான்செஸ், மாட்ரிட் கம்ப்ளூட்டன்ஸ் பல்கலைக்கழகம், ஸ்பெயின்; டாக்டர் ஸ்வர்ணலதா ரங்கராஜன், ஐஐடி மெட்ராஸ், டாக்டர் மீனாட்சி ஸ்ரீஹரி, சாய் பல்கலைக்கழகம் ஆவர்.
அனைத்துப் பங்கேற்பாளர்களுக்கும் மின்னணு சான்றிதழ் வழங்கப்படும்.
ஆசிரியர்கள், ஆராய்ச்சியளர்கள் மற்றும் மாணவர்கள் இப்பயிற்சியில்
கலந்துகொள்ளலாம். விண்ணப்பிக்கக் கடைசி நாள் 20.01.2024.
டாக்டர் வி.கே.கார்த்திகா, என்ஐடி
திருச்சி மற்றும் பேராசிரியர் பிரமோத் கே.நாயர், பேராசிரியர் அன்னா
குரியன், ஹைதராபாத் பல்கலைக்கழகம் ஆகியோர் இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் ஆவர்.
மேலும் விவரங்களுக்கு: https://www.nitt.edu/home/HSS_RRLC_DEC2023.pdf என்ற இணையதளத்தை அணுகவும்.
************
SMB/KV
(வெளியீட்டு அடையாள எண்: 1997712)
வருகையாளர் எண்ணிக்கை : 92