சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி திரு எஸ்.கோவேந்தன், வெளியுறவு அமைச்சகத்தின் சென்னைக் கிளைச் செயலகத்தின் தலைமை அதிகாரியாகக் கூடுதல் பொறுப்பேற்றுள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
17 JAN 2024 6:20PM by PIB Chennai
சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி திரு எஸ்.கோவேந்தன் ஐ.எஃப்.எஸ், வெளியுறவு அமைச்சகத்தின் சென்னைக் கிளைச் செயலகத்தின் தலைமை அதிகாரியாகக் கூடுதல் பொறுப்பேற்றுள்ளார்.
திரு கோவேந்தன் 2009-ம் ஆண்டு பிரிவு இந்திய வெளியுறவுப் பணி (ஐ.எஃப்.எஸ்) அதிகாரி ஆவார். 2011-2021-ம் ஆண்டு காலகட்டத்தில் போர்ச்சுகல், பிரேசில் மற்றும் பூட்டானில் உள்ள இந்தியத் தூதரகங்களில் அவர் பணியாற்றியுள்ளார். தற்போது 2021, ஜூலை 27 முதல் சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். இவர் சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவர் ஆவார்.
வெளியுறவு அமைச்சகக் கிளைச் செயலகத்தின் முந்தைய தலைவர் டாக்டர் எம். வெங்கடாசலம்- ஐ.எஃப்.எஸ், இங்கிலாந்தின் பர்மிங்காமில் உள்ள இந்தியத் துணைத் தூதராக நியமிக்கப்பட்டு அந்தப் பணிக்கு சென்றதையடுத்து இந்தப் பொறுப்பில் திரு கோவேந்தன் நியமிக்கப்பட்டார்.

***
SMB/PLM/AG/KRS
(வெளியீட்டு அடையாள எண்: 1997034)
வருகையாளர் எண்ணிக்கை : 153