மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
புதுதில்லி, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தில் 2024 ஜனவரி 17 அன்று நடைபெற உள்ள கலப்பின முறையில் மீன்வளம், மீன்வளர்ப்புக் காப்பீடு குறித்த தேசிய மாநாட்டிற்கு மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா தலைமை வகிப்பார்
प्रविष्टि तिथि:
16 JAN 2024 1:37PM by PIB Chennai
புதுதில்லி, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தில் 2024 ஜனவரி 17 அன்று நடைபெற உள்ள கலப்பின முறையில் மீன்வளம், மீன்வளர்ப்புக் காப்பீடு குறித்த தேசிய மாநாட்டிற்கு மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா தலைமை வகிப்பார். இந்நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு குழு விபத்து காப்பீட்டுத் திட்டக் காசோலைகளை மத்திய அமைச்சர் வழங்குவார். இணையமைச்சர்கள் திரு சஞ்சீவ் குமார் பல்யான், டாக்டர் எல்.முருகன், மீன்வளர்ப்புத் துறை செயலாளர் டாக்டர் அபிலாஷ் லிகி ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.
இம்மாநாடு, காப்பீட்டுத் திட்டங்களையும், அதன் பயன்களையும் மீனவர்களுக்கும், மீன்வளர்ப்போருக்கும் கிடைக்கச் செய்வதற்கான வழிவகைகள், காப்பீட்டுத் திட்ட சலுகைகள், ஊக்குவிப்புகள் போன்றவற்றில் புதுமைகளை ஊக்குவித்தல் ஆகியவற்றைப் பற்றி விவாதிப்பதற்கும், காப்பீட்டுத் துறையைச் சேர்ந்த அனைத்துப் பங்குதாரர்களுக்கும் ஒரு தளத்தை வழங்குவதாகும். இந்த மாநாட்டில் கொள்கை வகுப்பாளர்கள், அரசு அதிகாரிகள், ஆராய்ச்சியாளர்கள், மீன் வளர்ப்பவர்கள், மீன்வளர்ச்சிப் பல்கலைக்கழகங்கள், காப்பீட்டு நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் உட்பட 300-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியின் போது பெறப்பட்ட நுண்ணறிவுகள், ஆலோசனைகள் காப்பீட்டுத் துறையில் உள்ள இடைவெளிகளை நிவர்த்தி செய்வதற்கும், காப்பீடு மூலம் அதிக அபாயங்களைக் குறைப்பதற்கான உத்திகளை வகுப்பதற்கும், மீன்வளர்ப்பு மற்றும் படகுகளில் காப்பீடுகளுக்கான அணுகலை விரிவுபடுத்துவதற்கும் வழிவகுக்கும். அத்துடன் சந்தைத் தேவைகளுக்கு ஏற்ப காப்பீட்டு தயாரிப்பு, சேவை கண்டுபிடிப்புகளை எளிதாக்குதல் ஆகியவற்றுக்கும் பயனளிக்கும்.
இந்த மாநாட்டில் மீன்வளர்ப்புத் துறை, மாநில மீன்வளத் துறையின் உயர் அதிகாரிகள், தொழில் நிபுணர்கள் கலந்து கொள்கின்றனர். உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு, மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம், மத்திய உவர்நீர் நீர்வாழ் உயிரின வளர்ப்பு நிறுவனம் ஐ.சி.ஐ.சி.ஐ லம்பார்ட், ஓரியண்டல் காப்பீட்டு நிறுவனம், இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையப் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
----
AnU/SMB/IR/KPG/KV
(रिलीज़ आईडी: 1996634)
आगंतुक पटल : 126
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English