சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

புதுச்சேரி பல்கலைக்கழகம் நடத்திய இயற்பியல் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியில் சந்திரயான்-3 திட்ட இயக்குநர் டாக்டர்.பி.வீரமுத்துவேல் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்

இடுகை இடப்பட்ட நாள்: 09 JAN 2024 7:02PM by PIB Chennai
  • பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறை சார்பாக புவி அறிவியல் துறையின் அரங்கில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி  நடைபெற்றது. இஸ்ரோவின் சந்திரயான்-3 திட்ட இயக்குநர் டாக்டர். பி. வீரமுத்துவேல், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இயற்பியல் துறையின் இணைப் பேராசிரியர் டாக்டர்.எஸ். கோகுல் ராஜ் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து சிறப்பு விருந்தினரை வரவேற்றார். நிகழ்ச்சிக்கு சி&சிஆர் இயக்குநர் பேராசிரியர் கிளிமெண்ட் சகாயராஜா லூர்து தலைமை தாங்கினார்.

 

வெற்றிகரமாக சந்திரயான்-3 செலுத்தப்பட்டதையும், பயணத்தின் பாதையையும், நிலவில் சந்திரயான் தரை இறங்கிய நிகழ்வையும் நிலவில் ஊர்ந்து செல்லும் ரோவரின் பங்குகளையும் திரு வீரமுத்துவேல் எளிமையாக விளக்கினார். நிலவில் லேண்டர் பாதுகாப்பாக இறங்குவதற்கு விஞ்ஞானிகள் ஆற்றிய கவனமான பணியையும் மெய்சிலிர்க்கும் வகையில் அவர் எடுத்துரைத்தார். இந்த உரை, இயற்பியல், வேதியியல் மற்றும் புவி அறிவியல் மாணவர்களுக்கு மிகவும் ஆர்வத்தையும், ஊக்கத்தையும் அளித்தது. பல்வேறு பாடப்பிரிவை சார்ந்த இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் இதன் மூலம் பயன்பெற்றனர். இதனைத் தொடர்ந்து, ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள், மாணவர்கள் ஆகியோர் விஞ்ஞானி டாக்டர் வீரமுத்துவேலுடன் கலந்துரையாடினர். மாணவர்களின் கேள்விகளுக்கு அவர் விளக்கம் அளித்தார்.

 

இயற்பியல் துறையின் தலைவர் பேராசிரியர் ஆர்.சிவக்குமார், அத்துறையைச் சேர்ந்த அலோக் ஷரண்  உள்ளிட்டோர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

***

 


(வெளியீட்டு அடையாள எண்: 1994626) வருகையாளர் எண்ணிக்கை : 113
இந்த வெளியீட்டை படிக்க: English