சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
தொழில்துறை கல்விக்கு சென்னை ஐ.ஐ.டி மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பி.எஸ்.என்.எல் கையெழுத்திட்டது
Posted On:
27 DEC 2023 6:51PM by PIB Chennai
இந்தியாவின் முன்னணி நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பி.எஸ்.என்.எல்), பொறியியல் கல்வியில் மதிப்புமிக்க நிறுவனங்களான இந்திய தொழில்நுட்ப கழகம், மெட்ராஸ் (ஐ.ஐ.டி.எம்), சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் (ஏ.யூ) ஆகியவற்றுடன் குறிப்பிடத்தக்க கூட்டாண்மையைத் தொடங்கியது. இந்த ஒத்துழைப்புகள் மாணவர்கள், இளம் தொழில் வல்லுநர்களின் எதிர்கால தொழில் பாதைகளுக்கு மட்டுமல்லாமல், நாட்டில் மிகவும் தேவையான தொழில்-கல்வி முன்னேற்றத்திற்கு கணிசமான பங்களிப்பை வழங்கும் மகத்தான ஆற்றலைக் கொண்ட ஒரு உத்திசார்ந்த முயற்சியை பிரதிபலிக்கிறது. இது கல்வித் துறையில் முக்கிய நிறுவனங்களுடன் இணைந்து தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் கல்வியின் தரத்தை மேம்படுத்த அதன் உறுதிப்பாட்டை சுட்டிக்காட்டுகிறது.
சென்னை ஐ.ஐ.டி, அண்ணா பல்கலைக்கழகத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் மாணவர்கள், இளம் தொழில் வல்லுநர்களின் திறன்களை மேம்படுத்துவதற்காக கவனமாக வடிவமைக்கப்பட்ட படிப்புகள் உட்பட பல்வேறு உறுதியான முன்முயற்சிகளை உள்ளடக்கியது:
சென்னை ஐஐடி தலைமையிலான தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மையில் ஒரு வருட சர்வதேச படிப்பை பி.எஸ்.என்.எல் உடன் இணைந்து பாடத்திட்ட வடிவமைப்பு மற்றும் விநியோகத்தில் அறிமுகப்படுத்துதல். இந்த பாடத்திட்டம் இந்தியாவிலும், வெளிநாட்டிலும் உள்ள மாணவர்கள், இளம் தொழில் வல்லுநர்களுக்கு அதிநவீன தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மையில் தங்கள் திறன்களை மேம்படுத்துவதற்கான ஒரு அடித்தளமாக செயல்படுகிறது, இதன் மூலம் அவர்களின் வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி மேம்படும்.
தொழிற்துறைக்கும், கல்விக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதற்காக வடிவமைக்கப்பட்ட குறுகிய கால தொலைத்தொடர்பு தொழில்நுட்ப படிப்புகளை (எஸ்.டி.டி.சி) அறிமுகப்படுத்துதல், இதன் மூலம் மாணவர்களின் வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.
பி.எஸ்.என்.எல் இந்த எஸ்.டி.டி.சி படிப்புகளை நடத்துவதற்காக சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, நாகர்கோவிலில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகங்களில் ஆய்வகங்களை தொடக்கத்தில் நிறுவியது, எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட சுமார் நானூற்று ஐம்பது கல்லூரிகள் மற்றும் உறுப்புக் கல்லூரிகளிலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.
ஐ.ஐ.டி-மெட்ராஸ் மற்றும் சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, நாகர்கோவிலில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகங்களிலும் எஞ்சியுள்ள 450 கல்லூரிகளிலும் உள்ளடக்கிய வகையில் 4ஜி, 5ஜி கட்டமைப்புகளை விரிவுபடுத்தும் நொக்கம் கொண்டது.
ஐ.ஐ.டி.எம் பிரவர்தக்கிலிருந்து புத்தொழில் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிப்பதில் பி.எஸ்.என்.எல்லின் உறுதிப்பாடு, வணிக மேம்பாட்டுக்கான விரிவான உள்கட்டமைப்பு மற்றும் வலைப்பின்னல் தீர்வுகளுக்கான அணுகலை வழங்க உறுதிபூண்டுள்ளது.
மாணவர்கள், இளம் தொழில் வல்லுநர்கள், தொலைத்தொடர்புத் துறையின் வளர்ந்து வரும் தேவைகளுக்கு ஏற்ப புதிய படிப்புகளை அறிமுகப்படுத்துவதற்கான நெகிழ்வுத்தன்மை, அனைத்து பங்குதாரர்களுக்கும் தொடர்ச்சியான நன்மைகளை உறுதி செய்கிறது.
பி.எஸ்.என்.எல், எம்.டி.என்.எல் தலைவர், நிர்வாக இயக்குநர் திரு பிரவீன் குமார் புர்வார் இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி, சென்னை ஐஐடி இயக்குநர் டாக்டர் வி. காமகோடி, அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் ஆர் வேல்ராஜ், சென்னை ஐஐடி பிரவர்தக், தலைமை நிர்வாக அலுவலர், டாக்டர் எம்.ஜே. சங்கர் ராமன் ஆகியோருடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் பரிமாறிக்கொண்டார்.
***
(Release ID: 1991033)
Visitor Counter : 76