ஆயுஷ்
ஆயுஷ் அமைச்சகத்தின் 2023-ம் ஆண்டு செயல்பாடுகள் மற்றும் சாதனைகள்
Posted On:
23 DEC 2023 12:22PM by PIB Chennai
ஆயுஷ் அமைச்சகம் தேசிய மற்றும் சர்வதேச நிலைகளில் தொலைநோக்குத் திட்டங்கள் மற்றும் குறிக்கோள்களை செயல்படுத்துவதில் 2023-ம் ஆண்டில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த ஆண்டு இந்திய பாரம்பரிய மருத்துவ கலாச்சாரம் உலக அளவில் அதிகம் பரவியுள்ளது.
2023-ம் ஆண்டு செயல்பாடுகள் மற்றும் சாதனைகள்:
• ஆயுஷ் அமைச்சகத்தின் 2023-ம் ஆண்டின் முதல் சிந்தனை முகாம் பிப்ரவரி மாதம் அசாமின் காசிரங்கா தேசிய பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆயுஷ் மருத்துவ முறையில் டிஜிட்டல் சுகாதாரம் மற்றும் தொழில்நுட்பம், எதிர்கால முன்முயற்சிகள், சவால்கள், ஆயுஷ் கல்வி, திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு உருவாக்கம், ஆயுஷ் மருந்து தொழில்கள், ஆயுஷ் தயாரிப்புகளைத் தரப்படுத்தல், பொது சுகாதாரத்தில் ஆயுஷ், போன்றவை குறித்த அமர்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
• பாரம்பரிய மருந்துகள் தொடர்பான அம்சம் புதுதில்லி ஜி 20 தலைவர்கள் உச்சிமாநாட்டு பிரகடனத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
• அசாம் மாநிலம் குவஹாத்தியில் மார்ச் மாதம் நடைபெற்ற பாரம்பரிய மருத்துவம் குறித்த முதல் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு மற்றும் கண்காட்சியில் ரூ. 590 கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெற்றது.
• நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் நடந்த 2023-ம் ஆண்டு சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார். முன்னெப்போதும் இல்லாத வகையில், இரண்டு கின்னஸ் உலக சாதனைகள் இதில் நிகழ்த்தப்பட்டன.
• 9வது சர்வதேச யோகா தினத்தின் சிறப்பம்சமாக ஓஷன் ரிங் ஆஃப் யோகா என்ற தனித்துவமான அம்சம் நடத்தப்பட்டது. இதில் 19 இந்திய கடற்படை கப்பல்களில் சுமார் 3500 கடற்படை வீரர்கள் தேசிய மற்றும் சர்வதேச கடல்களில் யோகா தூதர்களாக 35,000 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்தனர்.
• ஆர்க்டிக் முதல் அண்டார்டிகா வரையிலான யோகா இந்த ஆண்டு யோகா தினத்தின் மற்றொரு சிறப்பு அம்சமாகும்.
• குஜராத் பிரகடனம்: பாரம்பரிய மருத்துவம் குறித்த முதல் உலகளாவிய உச்சி மாநாடு (17-18 ஆகஸ்ட் 2023) உலக சுகாதார அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பாரம்பரிய மருத்துவத்தின் முக்கியத்துவம் மற்றும் அதை நோக்கி செயல்படுவதற்கான உலக சுகாதார அமைப்பின் உறுதிப்பாட்டை வலியுறுத்தி குஜராத் பிரகடனம் வெளியிடப்பட்டது.
• ஜி 20 சுகாதார அமைச்சர்கள் கூட்டத்தின் போது "பாரம்பரிய மருத்துவம் குறித்த ஜி 20 நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் மாநாடு" நடைபெற்றது, இதன் மூலம் ஜி 20 நாடுகள் தங்கள் நாடுகளில் பாரம்பரிய மருத்துவத்தின் செயல்பாடுகள் மற்றும் வாய்ப்புகள் குறித்து பேசின.
• பிரதமர் திரு நரேந்திர மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் 'ஆயுஷ் துறைகள்' பற்றி குறிப்பிட்டது அதன் வளர்ச்சிக்கு கணிசமான பங்களிப்பை அளித்தது
• நவம்பர் 10, 2023 அன்று 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் ஆயுர்வேத தினம் அனுசரிக்கப்பட்டதால் ஆயுர்வேதம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பிரபலமடைந்தது
• ஆயுஷ் அமைச்சகம் பாரம்பரிய மருத்துவத் துறையில் உலக சுகாதார அமைப்புடன் திட்ட ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த நடவடிக்கை உலகளாவிய உத்தி சார் செயல்திட்டத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
• ஆயுஷ் விசா அறிமுகம்: ஆயுஷ் விசா அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் இந்திய மருத்துவ முறைகளின் கீழ் சிகிச்சை பெற இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டினருக்கு சிறப்பு விசா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆயுஷ் விசா மருத்துவ பயணத்தை அதிகரிக்கும் என்பதுடன் இந்தியாவை ஒரு மருத்துவ மையமாக மாற்றும்.
• தேசிய ஆயுஷ் இயக்கம்: தேசிய ஆயுஷ் இயக்கத்தின் முதன்மைத் திட்டம் ஆயுஷ், சுகாதார சேவைகளின் அடிப்படையில் நீண்டகால தாக்கத்தைக் கொண்டுள்ளது. 2023 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் 6.91 கோடி மக்கள் ஆயுஷ் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்கள் மூலம் பயனடைந்தனர்.
• ஆயுஷ் அமைச்சகம் அதன் பல்வேறு திட்டங்கள், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பல்வேறு உச்சி மாநாடுகள் மற்றும் மாநாடுகள், ஆயுஷ் பர்வ் மற்றும் எக்ஸ்போ போன்றவற்றின் மூலம் வடகிழக்கு பிராந்தியத்தின் சமூக-பொருளாதார வளர்ச்சியின் வேகத்தை விரைவுபடுத்துவதில் கணிசமான பங்களிப்பை வழங்கியது.
• பிப்ரவரி 11, 2023 அன்று, புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் யுனானி தினம் கொண்டாடப்பட்டது. யுனானி தினத்தை முன்னிட்டு யுனானி மருத்துவம் குறித்த சர்வதேச மாநாட்டையும் ஆயுஷ் துறை அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால் தொடங்கி வைத்தார்.
• உலக ஹோமியோபதி தினத்தை முன்னிட்டு, ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய ஹோமியோபதி ஆராய்ச்சி கவுன்சில் சார்பில், ஒரு நாள் அறிவியல் மாநாடு, தில்லியில் நடைபெற்றது. ஒட்டுமொத்த குடும்பத்தின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான ஆதார அடிப்படையில் ஹோமியோபதி சிகிச்சையை ஊக்குவித்தல் என்பதை நோக்கமாகக் கொண்டு இந்த மாநாடு நடத்தப்பட்டது.
*******
ANU/PKV/PLM/DL
(Release ID: 1989874)
Visitor Counter : 295