சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் ‘நமது லட்சியம் வளர்ச்சியடைந்த இந்தியா’ யாத்திரை: பயனாளிகளுக்கு இலவச எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டன

Posted On: 21 DEC 2023 4:31PM by PIB Chennai

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி பகுதியில் நடைபெற்ற நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் விழிப்புணர்வு நிகழ்ச்சியின்போது உஜ்வாலா திட்டத்தின் மூலம் இலவச எரிவாயு இணைப்புகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.

ஏராளமான பொதுமக்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்த காணொலி காட்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது.  இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இதில் அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்றனர்.

மத்திய அரசு திட்டங்களின் பயன்கள் பொது மக்களுக்குக் கிடைக்கும் வகையில் முகாம்கள் நடத்தப்பட்டு, தகுதியான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்ட.

ஜார்கண்ட் மாநிலம் குந்தியில் 2023, நவம்பர் 15ம் தேதியன்று பிரதமர் திரு நரேந்திர மோடியால் தொடங்கிவைக்கப்பட்ட பின், நமது லட்சிம் வளர்ச்சியடைந்த இந்தியா யாத்திரை  மூலம் நாடு முழுவதும் மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்களை  முழுமையாக மக்களுக்கு சென்றடைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

***

SMB/BS/RS/KV

   



(Release ID: 1989188) Visitor Counter : 62