குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்

உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுக்கும் வகையில், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன அலகுகள் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்குதல்

Posted On: 14 DEC 2023 2:48PM by PIB Chennai

08.12.2023 நிலவரப்படி, உதயம் பதிவு தளத்தில் பதிவு செய்யப்பட்ட மொத்த வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை (01.07.2020 முதல் 08.12.2023 வரை) 15,55,17,930.

உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்  என்ற இயக்கத்தின் கீழ் கதர் மற்றும் கிராமத் தொழில்களின் பங்களிப்பு விவரம் பின்வருமாறு:

கதர் மேம்பாட்டுத் திட்டம், கிராமத்தொழில்கள் மேம்பாட்டுத் திட்டம், பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் போன்ற கதர் மற்றும் கிராமத் தொழில்கள் நடவடிக்கைகளை கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் செயல்படுத்தி வருகிறது.

" உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம் " இயக்கத்தின் கீழ், கதர் மற்றும் கிராமத் தொழில் ஆணையம் பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

 (gem.gov.in) (khadiindia.gov.in) தளத்தின் மூலம் ஆடை, அழகுசாதனப் பொருட்கள், மளிகை, அத்தியாவசிய பொருட்கள், அணிகலன்கள், பரிசுகள், துணி, பொம்மைகள் போன்றவற்றை அறிந்துகொள்வதற்கு வகை செய்யப்பட்டுள்ளது.

மும்பையில் அக்டோபர் 2-ம்தேதி முதல் 30-ம்தேதி வரை கதர் திருவிழா நடைபெற்றது.

இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பு புதுதில்லியில் 2023 நவம்பர்14 முதல் 27 வரை ஏற்பாடு செய்த இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சி 2023-ல் கே.வி.ஐ.சி பங்கேற்றது மற்றும் இந்த நிகழ்வில் ரூ.15.03 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

ஆந்திரா, நாக்பூரில் இரண்டு மாநில அளவிலான கண்காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

கதர் பெருவிழா 2023 அக்டோபர் 2 முதல் 2023 நவம்பர் 15 வரை நடைபெற்றது. இதன் மூலம் நாடு முழுவதும் 186 சிறு பொருட்காட்சிகள் நடத்தப்பட்டு, ரூ.9.84 கோடி விற்பனை செய்யப்பட்டு, சுமார் 2.57 இலட்சம் பேர் வருகை தந்துள்ளனர்.

இத்தகவலை மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை இணையமைச்சர் திரு பானு பிரதாப் சிங் வர்மா மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

     

***

ANU/PKV/IR/AG/KPG



(Release ID: 1986320) Visitor Counter : 51


Read this release in: English , Urdu , Hindi