சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்

சாமானிய மக்களுக்குக் குறைந்த செலவில் நீதி

Posted On: 08 DEC 2023 2:35PM by PIB Chennai

 நாட்டில் உள்ள சாமானிய மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் அணுகக்கூடிய நீதியை வழங்குவதற்காக அரசு பல முன்முயற்சிகளை எடுத்துள்ளது. இதற்காக பல திட்டங்களையும் தொடங்கியுள்ளது.


 மேலும் கொரோனாவை கருத்தில் கொண்டு, இ-லோக் அதாலத் உருவாக்கப்பட்டது, இது லோக் அதாலத்தில் பங்கேற்க முடியாத மக்களுக்கு நீதி கிடைப்பதை கணிசமாக மேம்படுத்தியது. முதல் இ-லோக் அதாலத் 27.06.2020 அன்று நடைபெற்றது, அதன் பின்னர் 28  மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் மின்னணு லோக் அதாலத்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. இதில் 441.17 லட்சம் வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு 76.16 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

பொது சேவை மையங்களில் உள்ள டெலி / வீடியோ கான்பரன்சிங் வசதிகள் மற்றும் டெலி-லா மக்கள் மொபைல் பயன்பாடு மூலம் பயனாளியை வழக்கறிஞருடன் இணைக்க டெலி-லா சேவை முயல்கிறது. நவம்பர் 30, 2023 நிலவரப்படி, 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 766 மாவட்டங்களில் உள்ள 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துகளில் டெலி-லா சேவைகள் கிடைக்கின்றன, மேலும் பெண்கள், குழந்தைகள், ஆதிதிராவிடர், பழங்குடியினர் உள்ளிட்ட 60,23,222 பயனாளிகளுக்கு சட்ட ஆலோசனைகளை வழங்கியுள்ளது.

இத்தகவலை மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை (தனிப்பொறுப்பு), நாடாளுமன்ற விவகாரத்துறை, கலாச்சாரத் துறை இணையமைச்சர் திரு அர்ஜூன் ராம் மேக்வால் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

***

(Release ID: 1983953)

ANU/SMB/PKV/AG/KRS



(Release ID: 1984098) Visitor Counter : 59


Read this release in: English