குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்

எம்.எஸ்.எம்.இ.க்களைத் தேர்வு செய்வதற்கான அளவுகோல்கள்

Posted On: 07 DEC 2023 4:23PM by PIB Chennai

தற்சார்பு இந்தியா நிதி வழிகாட்டுதல்களின்படி, எம்.எஸ்.எம்.இ. சட்டத்தின்படி வரையறுக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (எம்.எஸ்.எம்.இ.க்கள்), அவ்வப்போது திருத்தப்படுகின்றன. மதிப்பீட்டிற்குப் பிறகு, சாத்தியமானதாகக் கண்டறியப்பட்ட, வளர்ச்சிப் பாதை நேர்மறையாக இருக்கும். நேர்மறையான நிதி ஓட்டத்தைக் குறிக்கும் வளர்ச்சிக்கான வரையறுக்கப்பட்ட வணிகத் திட்டத்தைக் கொண்ட அனைத்து  எம்.எஸ்.எம்.இ.க்களுக்கும் ஆதரவு வழங்கப்படுகிறது.

தற்சார்பு இந்தியா தொகுப்பின் ஒரு பகுதியாக, எம்.எஸ்.எம்.இ.க்களுக்கான நிதி  மூலம் ரூ .50,000 கோடி பங்கு உட்செலுத்துதல் அறிவிக்கப்பட்டது. ரூ.50,000 கோடி மதிப்பிலான இந்த நிதியத்தின் கீழ், மத்திய அரசிடமிருந்து ரூ.10,000 கோடியும், தனியார் பங்கு மூலதன நிதி மூலம் ரூ.40,000 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொடங்கப்பட்டதிலிருந்து, 25.11.2023 வரை ரூ.6,200 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.   

இத்தகவலை மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை இணையமைச்சர் திரு பானு பிரதாப் சிங் வர்மா மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

*******

ANU/SMB/PKV/KV

 



(Release ID: 1983740) Visitor Counter : 49


Read this release in: English , Urdu , Hindi