சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

தென்னக இரயில்வே சரக்குப் போக்குவரத்தின் மூலம் நடப்பு 2023-24–ம் நிதியாண்டில் நவம்பர் மாதம் வரை ரூ.2319 கோடி வருவாயை ஈட்டியுள்ளது

26.08 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு சாதனை படைத்துள்ளது

Posted On: 01 DEC 2023 7:33PM by PIB Chennai

2023 நவம்பர் மாதத்தில் தென்னக ரயில்வே 3.289 டன் சரக்கு ஏற்றுதல் பதிவு செய்து, ரூ.291 கோடி வருவாயைப் பதிவு செய்துள்ளது.
நடப்பு 2023-24 நிதியாண்டில் நவம்பர் 2023 வரை 26.082 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு தென்னக ரயில்வே ரூ.2319.255 கோடி வருவாயை ஈட்டியுள்ளது. கடந்த 2022-23 நிதியாண்டின் இதே காலகட்டத்தின் வருவாயை விட இது ரூ. 16.52 கோடி அதிகமாகும். 2023 ஏப்ரல் - நவம்பர் 2023 காலகட்டத்தில் 26.082 மில்லியன் டன் சரக்குகளை தென்னக இரயில்வே கையாண்டுள்ளது. கடந்த 2022-23 நிதியாண்டின் இதே காலகட்டத்தை  விட இது 5.25 சதவீதம் அதிகமாகும்.

2023 நவம்பர் மாதத்தில் மட்டும், தென்னக ரயில்வே 3.289 மில்லியன் டன் சரக்குகளை கொண்டு சென்றுள்ளது. இது நவம்பர் மாதத்தைப் பொறுத்தவரை கடந்த 12 ஆண்டுகளில் மிக அதிகபட்சமானதாகும். 2023 நவம்பரில் மட்டும் சரக்குப் போக்குவரத்து மூலம் ரூ.291 கோடி வருவாயை தெற்கு ரயில்வே ஈட்டியுள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் பதிவான அதிகபட்ச வருவாய் ஆகும்.

இந்த தகவலை தென்னக ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அலுவலர் திரு பா குகநேசன் தெரிவித்துள்ளார்.


***************
ANU/AD/PLM/RS/KRS


(Release ID: 1981674)
Read this release in: English