சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
சென்னையில் உள்ள வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (அபெடா) தேசிய முந்திரி தினத்தைக் கொண்டாடியது கடலூரிலிருந்து கத்தார், மலேசியா ஆகிய நாடுகளுக்கு நவம்பர் 23 அன்று முந்திரி ஏற்றுமதி செய்யப்பட்டது
प्रविष्टि तिथि:
23 NOV 2023 4:34PM by PIB Chennai
உலகளாவிய தேவையுள்ள குறிப்பிடத்தக்க வேளாண் உற்பத்திப் பொருட்களில் ஒன்றாக முந்திரி அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய முந்திரி தினம் 2023 நவம்பர் 23 அன்று கொண்டாடப்பட்டது. முந்திரி உற்பத்தி / பதப்படுத்துதலில் முக்கிய மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஒடிசா, மகாராஷ்டிரா, ஆந்திரா, மேகாலயா போன்றவற்றில் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் இந்தத் தினத்தைக் கொண்டாட ஏற்பாடு செய்திருந்தது.
"ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு" என்ற மத்திய அரசின் திட்டத்திற்கு ஊக்கமளிப்பதை நோக்கமாகக் கொண்டு, இந்தியாவின் ஒட்டுமொத்த முந்திரி ஏற்றுமதிக்கு கணிசமான பங்களிப்பை வழங்கும் தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டம் அடையாளம் காணப்பட்டது.
முந்திரி விவசாயிகள், பதப்படுத்துவோர் மற்றும் வணிகர்களை ஊக்குவிப்பதற்காக கடலூர் மாவட்டத்தில் நவம்பர் 23 அன்று தேசிய முந்திரி தினத்தை அபெடா ஏற்பாடு செய்தது. இதையொட்டி கத்தார் நாட்டின் தோஹாவிற்கு 15 மெட்ரிக் டன் முந்திரி கொட்டைகளும், மேற்கு மலேசியாவின் பேராக்கிற்கு 15.876 மெட்ரிக் டன் முந்திரி கொட்டைகளும் ஏற்றுமதிக்காக வாகனங்களில் கொடியசைத்து அனுப்பி வைக்கப்பட்டது.
தமிழ்நாடு வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு. எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், சட்டமன்ற உறுப்பினர் திரு.தி.வேல்முருகன், கடலூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அ.அருண் தம்புராஜ் ஆகியோர் இந்த வாகனங்களைக் கொடியசைத்து அனுப்பிவைத்தனர். அபெடா தலைவர் இந்த நிகழ்வில் காணொலி காட்சி மூலம் கலந்துகொண்டார்.
தமிழ்நாடு முந்திரி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்துடன் இணைந்து அபெடா இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தது.
***
ANU/PKV/SMB/AG/KV

(रिलीज़ आईडी: 1979135)
आगंतुक पटल : 137
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English