சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் கீழ் பல்வேறு பயனாளிகளுக்கு வங்கிக் கடன்கள் வழங்கப்பட்டன


ராமேஸ்வரம், விருதுநகர் நிகழ்வுகளில் மத்திய நிதி அமைச்சர் திருமதி.நிர்மலா சீதாராமன் பங்கேற்றார்

Posted On: 19 NOV 2023 6:22PM by PIB Chennai

தெருவோர வியாபாரிகளுக்கு அதிகாரமளிக்கும் வகையில், நவம்பர் 19ஆம் தேதி, ராமேஸ்வரம் அமிர்தா வித்யாலயம் பள்ளி மற்றும் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியில் பிரதமரின் ஸ்வநிதி கடன் வழங்கும் திட்டத்தின் நிகழ்வுகள் நடைபெற்றன.

பிரதமரின் சாலையோர வியாபாரிகளின் தற்சார்பு நிதித் திட்டத்தின் கீழ் பல்வேறு பயனாளிகளுக்கு வங்கிக் கடன்கள் வழங்கப்பட்டன. கூடுதலாக, ஸ்வநிதி செழிப்பு  திட்டத்தின் (பிரதமரின் சுரக்ஷா யோஜனா, பிரதமரின்  ஜீவன் ஜோதி பீமா யோஜனா,  பிரதமரின் ஜன் தன் யோஜனா) பயனாளிகள் அனுமதி கடிதங்களைப் பெற்றனர். டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் சிறந்து விளங்கும் பிரதமரின் ஸ்வநிதி பயனாளிகளுக்கு பாராட்டு விழாவும் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை தமிழ்நாடு மாநில அளவிலான வங்கியாளர்கள் குழு ஒருங்கிணைப்பாளரான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியும் ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டத்திற்கான முன்னணி வங்கியும் ஏற்பாடு செய்தன. பிரதமர் ஸ்வநிதி முயற்சியின் வெற்றிக்கு பல்வேறு வங்கிகளின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டிருந்தது.

மத்திய நிதி அமைச்சர் திருமதி.நிர்மலா சீதாராமன் ராமேசுவரத்தில் காலை 10:00 மணிக்கும், விருதுநகரில் மாலை 4:00 மணிக்கும் நிகழ்வுகளைத் தொடங்கி வைத்தார்.

மத்திய நிதி சேவைகள் துறையின் செயலாளர் டாக்டர் விவேக் ஜோஷி, இணை செயலாளர் டாக்டர் பிரசாந்த் குமார் கோயல், மாநில அளவிலான வங்கியாளர்கள் குழு தலைவர் & இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிர்வாக இயக்குநர் & தலைமை செயல் அதிகாரி திரு. அஜய் குமார் ஸ்ரீவஸ்தவா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி செயல் இயக்குநர் திரு. சஞ்சய் விநாயக முதலியார், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் எஸ்எல்பிசி ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொது மேலாளர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பல்வேறு வங்கிகளின் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், பயனாளிகள் மற்றும் பிற அதிகாரிகள், இந்த நிகழ்வை சமூகத்தின் முன்னேற்றத்திற்கான கூட்டு முயற்சியாக மாற்றினர்.

மத்திய அரசால் தொடங்கப்பட்ட பிரதமரின் ஸ்வநிதி கடன் திட்டம், வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள சாலையோர வியாபாரிகளுக்கு ஆதரவளிக்கிறது. இந்த நிகழ்வு பொருளாதார மேம்பாட்டிற்காக கடன்களை வழங்குதல் மற்றும் பரந்த மக்களிடையே திட்டத்தின் பலன்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகியவை இந்த நிகழ்வின்  இரட்டை நோக்கங்களாகும்.    

          

          

***

AD/SMB/BS/DL



(Release ID: 1978038) Visitor Counter : 115


Read this release in: English