குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
அஜ்மீர் மாயோ கல்லூரி மகளிர் பள்ளி ஆண்டு பரிசளிப்பு விழாவில் குடியரசு துணைத் தலைவர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
Posted On:
08 NOV 2023 2:40PM by PIB Chennai
அனைவருக்கும் வணக்கம்!
கல்வி என்பது உலகை மாற்றக்கூடிய, சமத்துவத்தை கொண்டு வரக்கூடிய, ஏற்றத்தாழ்வுகளைக் கட்டுப்படுத்தக்கூடிய மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாகும்.
நண்பர்களே,
புத்திசாலிகள் மத்தியில் இருப்பது ஒரு முழுமையான கௌரவம் மற்றும் பாக்கியமாகும். விமான நிலையத்திலிருந்தே நான் பெண்களைப் பார்த்திருக்கிறேன், அவர்களின் கண்களில் காணப்படும் ஒளி, அவர்கள் தற்போதைய இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என்பதைக் காட்டுகிறது. 2047-ஆம் ஆண்டில் இந்தப் பெண்கள் முதிர்ச்சியடைந்தவர்களாக இருப்பார்கள். அவர்களது பங்களிப்பு இந்தியாவின் தலைவிதியை தீர்மானிக்கும் என்றும், நாடுகளின் உச்சத்தில் இந்தியாவை ஒரு வளர்ந்த நாடாக மாற்றும் என்றும் நான் முழுமையாக நம்புகிறேன்.
30 ஆண்டு என்னும் குறுகிய காலத்தில், இந்த நிறுவனம் நிகரற்ற புகழைப் பெற்றுள்ளது. நிர்வாகத்தின் சாதுர்யம், ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு, மாணவர்களின் கடின உழைப்பு ஆகியவையே இதற்கு காரணமாகும்.
பள்ளியின் விருது பெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். விருதுகளின் மாறுபட்ட தன்மை, இது ஒரு முழுமையான முறையில் கல்வி கற்பிக்கப்படும் ஒரு நிறுவனம் என்பதைக் குறிக்கிறது.
நண்பர்களே,
நான் உங்களை சைனிக் பள்ளியில் படித்த நாட்களுக்கு அழைத்துச் செல்கிறேன். நான் ஒரு திறமையான மாணவனாக இருந்தேன், ஏனெனில், அது மதிப்பெண் சான்றிதழால் பிரதிபலித்தது. நாம் அதை விட, அதிகமாக செயல்பட வேண்டும். இந்த நிறுவனம் அதையும் தாண்டிச் செல்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
உங்களை நீண்ட தூரம் அழைத்துச் செல்லும் கல்வி உட்பட அனைத்து அம்சங்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சி இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மயோ கல்லூரியின் பெண்கள் பள்ளி தொடர்ந்து நாட்டின் ஒரு முதன்மை நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. முதலிடம் பெற்றவர்கள், துப்பாக்கி சுடுதல் வீரர்கள், விளையாட்டு வீரர்கள், நீச்சல் வீரர்கள், நடிகர்கள், நடனக் கலைஞர்கள், இசைக்கலைஞர்கள், பாடகர்கள், தொழில்முனைவோர், விமானிகள், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் உயர் குடிமைப் பணிகளின் உறுப்பினர்களை இந்தப்பள்ளி உருவாக்கியுள்ளது.
2022-ஆம் ஆண்டில் நாடு ஒரு மைல்கல் சாதனையைக் கொண்டிருந்தது. நமது டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியின் ஒருங்கிணைந்த பரிவர்த்தனைகளை விட நான்கு மடங்கு அதிகமாகும்.
எனவே, உங்கள் சாதனைகளை அந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கிறேன்.
முன்னாள் மாணவர்கள் செய்யும் பல்வேறு பங்களிப்புகள் மிகவும் முக்கியமானவை. முன்னாள் மாணவர்கள் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றவர்கள் முதல் சமையல் கலை வல்லுனர்கள் வரை ஒவ்வொரு துறையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர். இந்த வழிகள் அனைவருக்கும் திறந்திருக்கும் காலம் இது.
நண்பர்களே,
மனித வாழ்வின் ஒவ்வொரு வளர்ச்சிக்கும், கல்வியே திறவுகோல் என்பதால், இந்த நிறுவனத்தில் நீங்கள் முக்கியமானவற்றில் ஈடுபடுகிறீர்கள். 30 ஆண்டுகளுக்குப் பிறகு, அனைத்து தரப்பினரிடமிருந்தும் உள்ளீடுகளைப் பெற்ற பிறகு உருவாக்கப்பட்ட புதிய கல்விக் கொள்கை, இந்த நாட்டை மிக உயரத்திற்கு கொண்டு செல்லும் ஒரு குறிப்பிடத்தக்க ஆவணமாகும்.
உங்கள் கற்றல் மற்றும் வளர்ச்சிப் பயணத்தைத் தொடரும் பள்ளிக்கும், மாணவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னைப் பொறுத்தவரை 2047-ம் ஆண்டின் பாரதத்தை நிர்ணயிக்கும் வீரர்களான உங்களுடன, வீரர்களுடன் எனது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த மகாராஜா கஜ் சிங் ஜிக்கு மீண்டும் ஒரு முறை நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். 2047-ல் உலகின் மிகவும் வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்ற கனவை இந்தியா நனவாக்கும் என்பது அவர்களின் தோள்களில்தான் உள்ளது. மயோ கல்லூரி மகளிர் பள்ளியின் உத்வேகம் இனி வரும் ஆண்டுகளில் தொடர்ந்து பிரகாசிக்கட்டும்.
மிக்க நன்றி!
*****
ANU/PKV/IR/RS/KPG
(Release ID: 1975651)
Visitor Counter : 100