சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நூல் வெளியீடு

Posted On: 07 NOV 2023 6:34PM by PIB Chennai

புதுவை மத்தியப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் குர்மீத்சிங் அவர்கள் “Interdisciplinary Art Practices: Problems and Possibilities” என்ற நூலை வெளியிட்டார். இந்த நூல் 2022-ஆம் ஆண்டு உலக நாடக தினக் கொண்டாட்டத்தின் பொழுது நடத்தப் பெற்ற பன்னாட்டுக் கருத்தரங்கக் கட்டுரைகளின் தொகுப்பாகும். முனைவர் கோ.ரா. இராசா ரவிவர்மா, (இணைப் பேராசிரியர், நிகழ்த்துக்கலை துறை, புதுவைப் பல்கலைக்கழகம்) அவர்கள் மேற்குறித்த கட்டுரைகளை தொகுத்தும் பகுத்தும் நூலாகப் பதிப்பித்துள்ளார். இந்த நூல் வெளியீட்டு விழாவில் நிகழ்த்துக்கலைத் துறையின் புலத்தின் டீன் பேராசிரியர் பெ. ஸ்ரீதரன், துறைத்தலைவர் முனைவர் சரவணன் வேலு, பயிற்றுநர் முனைவர் . முருகவேல், உதவிப் பேராசிரியர்கள் முனைவர் பவித்ரா, முனைவர் பிரியங்கா சர்மா மற்றும் பலர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

----

AD/KPG

AD/KRS

(Release ID: 1975467) Visitor Counter : 90

Read this release in: English