நிதி அமைச்சகம்
தேர்தல் பத்திரங்களின் 29-வது கட்ட விற்பனையில், பாரத ஸ்டேட் வங்கி அதன் 29 அங்கீகரிக்கப்பட்ட கிளைகள் மூலம் 06.11.2023 முதல் 20.11.2023 வரை தேர்தல் பத்திரங்களை விற்பனை செய்ய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது
प्रविष्टि तिथि:
04 NOV 2023 2:14PM by PIB Chennai
தேர்தல் பத்திரங்களை, 06.11.2023 முதல் 20.11.2023 வரை, பாரத ஸ்டேட் வங்கி அதன் 29 அங்கீகரிக்கப்பட்ட கிளைகள் மூலம் விற்பனை செய்ய மத்திய அரசு அதிகாரம் அளித்துள்ளது.
தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்பட்ட தேதியிலிருந்து 15 நாட்களுக்கு செல்லுபடியாகும். செல்லுபடியாகும் காலம் முடிந்த பின்னர் தேர்தல் பத்திரம் டெபாசிட் செய்யப்பட்டால் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் பணம் செலுத்தப்பட மாட்டாது.
2018-ம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி தேர்தல் பத்திரத் திட்டம் அறிவிக்கப்பட்டு 2022 நவம்பர் 7ஆம் தேதி அதில் திருத்தம் செய்யப்பட்டது. தேர்தல் பத்திரங்களை இந்திய குடிமகனாக இருக்கும் யாரும் வாங்கலாம். ஒரு நபர் ஒரு தனிநபராக இருப்பதால், தனியாகவோ அல்லது பிற நபர்களுடன் கூட்டாகவோ தேர்தல் பத்திரங்களை வாங்கலாம். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-ன் பிரிவு 29 ஏ-ன் கீழ் (1951 -ன் 43) பதிவு செய்யப்பட்ட மற்றும் கடந்த பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகளில் ஒரு சதவீதத்திற்கும் குறையாத வாக்குகளைப் பெற்ற அரசியல் கட்சிகள் மட்டுமே தேர்தல் பத்திரங்களைப் பெற தகுதி பெறும்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைப் பொறுத்தவரை கீழ்க்கண்ட் வங்கிக் கிளைக்கு தேர்தல் பத்திரங்களை வெளியிட அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி,
சென்னை பிரதான கிளை 336/166,
தம்புசெட்டி தெரு, பாரிமுனை, சென்னை -600001
வங்கி குறியீட்டு எண்: 00800
****
PKV/PLM/DL
(रिलीज़ आईडी: 1974695)
आगंतुक पटल : 161