சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

இந்தோ-திபெத் எல்லைக் காவல் படை பதவிப் பிரமாண விழா மற்றும் அணிவகுப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 02 NOV 2023 3:04PM by PIB Chennai

சிவகங்கை, இலுப்பைக்குடி கிராமத்தில் அமைந்துள்ள இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படையின் ஆள்சேர்ப்பு பயிற்சி மையத்தில் பிரமாண்டமான  (கான்ஸ்டபிள்/ பொதுப் பணி) பதவிப்பிரமாண அணிவகுப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  481 & 485 பேட்ச்-ன் 348  பயிற்சி காவலர்களின் தேர்ச்சி மற்றும் பதவிப்பிரமாண அணிவகுப்பு விழாவிற்கு, இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படையின் ஐஜி திரு. அசோக்குமார் தலைமை வகித்தார். பதவிப்பிரமாணத்திற்கு பிறகு, இந்தக் காவலர்கள் இந்தோ திபெத்திய எல்லைக் காவல்துறையின் முக்கிய பங்கான நாட்டின் பாதுகாப்பிற்கு தங்கள் பங்களிப்பை வழங்குவார்கள். இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படையானது, நாட்டின் சிறந்த படை ஆகும், இப்படை G-20 மாநாட்டின் பாதுகாப்பு, அமர்நாத் யாத்ரா, பேரிடர் மேலாண்மை, ஐ.நா அமைதிப் பணிகளில் ஈடுபடுத்துதல் மற்றும் எல்லைப் பாதுகாப்புடன் நக்சல்கள் நிறைந்த பகுதிகளில் நக்சல் நடவடிக்கை போன்ற பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது..

அணிவகுப்பு தொடங்கும் முன், தலைமை விருந்தினரை சிவகங்கை இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படையின் ஆள்சேர்ப்பு பயிற்சி மையத்தின் டிஐஜி  திரு. அச்சல் சர்மா வரவேற்றார். அணிவகுப்பைத் தொடர்ந்து பரிசளிப்பு விழா, கண்கவர் செயல் விளக்கம் மற்றும் கண்காட்சிகள் நடைபெற்றன.

அணிவகுப்புக்கு பயிற்சி காவலர்களின் உறவினர்கள் மற்றும் சிவில், காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படைகளின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். சிவகங்கை ஆள்சேர்ப்பு மையத்தின் கமாண்டட் திரு. சுரேஷ் குமார் யாதவ் நன்றியுரையுடன் விழா நிறைவு பெற்றது.

---

ANU/AD/PKV/KV

 

 

 


(வெளியீட்டு அடையாள எண்: 1974101) வருகையாளர் எண்ணிக்கை : 129
இந்த வெளியீட்டை படிக்க: English