சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

அனைவரையும் உள்ளடக்கிய தொழில்முனைவை ஊக்குவிக்கும் பி.எம். ஸ்வநிதி

இதுவரை ரூ.9,152 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தினால் ஏற்பட்ட மாற்றத்திற்குப் பிரதமர் பாராட்டு

Posted On: 26 OCT 2023 5:27PM by PIB Chennai

தெருவோர வியாபாரிகளுக்காக மத்திய அரசால் தொடங்கப்பட்ட நுண்கடன் திட்டமான பிரதமரின் ஸ்வநிதி, 'அனைவரையும் உள்ளடக்கிய தொழில்முனைவை' ஊக்குவிக்க  உதவியதுடன் பாலின சமத்துவத்தை நிரூபித்துள்ளது.   பி.எம்-ஸ்வநிதி என்பது பி.எம் தெருவோர வியாபாரிகளின் தற்தார்பு நிதியைக் குறிக்கிறது.

கோவிட் 19 பெருந்தொற்றுக் காலத்தில், ஜூன் 1, 2020 அன்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், தகுதியான தெருவோர வியாபாரிகளுக்கு கூடுதல் தவணைகளில் ரூ.50,000 வரை பிணையற்ற கடன்களை வழங்குகிறது.   இது மூன்று தவணைகளில் கடன்களை வழங்குகிறது, - முதல் தவணை ரூ.10,000,  2வது தவணை ரூ.20,000. இரண்டாவது கடனை திருப்பிச் செலுத்திய பின்னர் 3 வது தவணையாக ரூ.50,000.

எஸ்.பி.ஐ.யின் சமீபத்திய ஆய்வு, 43% பயனாளிகள் பெண் தெருவோர வியாபாரிகள் என்று கூறியுள்ளது.  மேலும் பிரதமரின் ஸ்வநிதி பயனாளிகளில் 44% பேர் ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள், அதே நேரத்தில் பட்டியல் வகுப்பு மற்றும் பழங்குடியினர் 22% உள்ளனர். 

இந்த அறிக்கையை தது வலைப்பதிவில் பகிர்ந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, இந்தத் திட்டத்தின் உருமாற்றத் தன்மையைப் பாராட்டியுள்ளார்.  "பாரத ஸ்டேட் வங்கியின் சௌமியா காந்தி கோஷின் இந்த ஆழமான ஆராய்ச்சி பிரதமர் ஸ்வநிதியின் உருமாற்றத் தாக்கம் குறித்த மிகத் தெளிவா விளக்குகிறார். இது இந்த திட்டத்தின் உள்ளடக்கிய தன்மையைக் குறிப்பிடுவதுடன்  விளிம்புநிலை மக்களின் நிதி அதிகாரமளித்தலுக்கு இது எவ்வாறு வழிவகுத்தது என்பதை எடுத்துக்காட்டுகிறது".

இந்தத் திட்டத்தின் கீழ், வழக்கமான திருப்பிச் செலுத்துதல் 7 சதவீத வட்டி மானியத்துடன் ஊக்குவிக்கப்படுகிறது, மேலும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு ஆண்டுக்கு ரூ.1,200 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் தகவல் பலகையின்படி, அக்டோபர் 26, 2023 நிலவரப்படி, 57.20 லட்சம் கடன்கள் முதல் தவணையாகவும்,  15.92 லட்சம் கடன்கள் 2-வது தவணையாகவும், 1.94 லட்சம் கடன்கள் 3 வது தவணையாகவும் வழங்கப்பட்டுள்ளன. 

அறிக்கையின்படி, முதல் கடனான ரூ.10,000 மற்றும் இரண்டாவது கடனான ரூ.20,000- கடனைத் திருப்பிச் செலுத்துவோரின் விகிதம் 68% ஆகும். அதேபோன்று, இரண்டாவது கடனான ரூ.20,000-ஐயும், மூன்றாவது கடனான ரூ.50,000-ஐயும் திருப்பிச் செலுத்துவோரின் விகிதம் 75% ஆகும். இது சிறு மற்றும் குறு தெருவோர வியாபாரிகளின் நிதிக் கட்டுப்பாட்டைக் காட்டுகிறது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை வங்கிகள் ரூ.9,152 கோடி கடன்களை வழங்கியுள்ளன. 

பொதுத் துறை வங்கிகள் கடன் வழங்குவதில் முன்னணியில் உள்ளன.  பொதுத்துறை வங்கிகளில், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) இந்தத் திட்டத்தின் கீழ் மொத்த கடன்களில் 31% வழங்கியுள்ளது, அதைத் தொடர்ந்து பாங்க் ஆப் பரோடா (31%), யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா (10%) மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி (8%) ஆகியவை உள்ளன.

பிரதமரின் ஸ்வநிதி தகவலின்படி, சுமார் 5.9 லட்சம் கடன் வாங்கியவர்கள் 6 பெருநகரங்களில் உள்ளனர், 7.8 லட்சம் கடன் வாங்கியவர்கள் முதல் 10 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரங்களில் இருந்து வந்தவர்கள்.  நகரங்களில், அகமதாபாத்தில் அதிக எண்ணிக்கையிலான பிஎம் ஸ்வநிதி கணக்கு வைத்திருப்பவர்கள் 1,37,516 ஆக உள்ளனர்.    வாரணாசியில் 45 சதவீதம் பேரும், பெங்களூருவில்  31 சதவீதம் பேரும், சென்னையில் 30 சதவீதம் பேரும், பிரயாக்ராஜில் 30 சதவீதம்  பேரும் கடன் பெற்று திருப்பிச் செலுத்துபவர்களில் உள்ளனர்.

***

AD/PKV/AG/KRS



(Release ID: 1971581) Visitor Counter : 113


Read this release in: English