சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

உலகளாவிய கடல்சார் இந்தியா உச்சி மாநாடு 2023 இந்திய கடல்சார் பல்கலைக்கழகம்: உலகளாவிய கல்வி உரையாடல்கள் (புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்)

Posted On: 18 OCT 2023 5:11PM by PIB Chennai

மிகப் பழமையான கடல்சார் பயிற்சி நிறுவனங்களைக் கொண்ட மிகப்பெரிய கடல்சார் பல்கலைக்கழகமான இந்திய கடல்சார் பல்கலைக்கழகம், 2023 அக்டோபர் 17 முதல் 19 வரை மும்பையில் நடைபெறும் உலகளாவிய கடல்சார் இந்தியா உச்சிமாநாட்டில் பங்கேற்கிறது. பிரதமர் திரு நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட இம்மாநாட்டில் மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களைச் சேர்ந்த தலைவர்கள், இந்திய மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த முன்னணி கடல்சார்  நிறுவனங்கள் மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏராளமான அமைச்சர்கள்  மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

 

இந்நிகழ்ச்சியில் மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சர் திரு நாராயண் தத்து ரானே, இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் மின் நூலகத்தையும் மத்திய அரசின் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் திரு ஸ்ரீபாத் நாயக் புதுப்பிக்கப்பட்ட இணையதளத்தையும் திறந்து வைத்தனர்.

 

இந்த நிகழ்வில், கடல்சார் கல்வி மற்றும் ஆராய்ச்சி முறைகளை வலுப்படுத்துவதற்கா எராஸ்மஸ் பல்கலைக்கழகம், ரோட்டர்டாம் பல்கலைக்கழகத்தின் நகர்ப்புற துறைமுகம் மற்றும் போக்குவரத்து பொருளாதார மையத்துடன் இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

இலங்கையின் திருகோணமலை வளாகத்தில் உள்ள கிழக்குப் பல்கலைக்கழகம் அறிவியல், வணிகம் போன்ற துறைகளில் படிப்புகளை அளிக்கிறது. கடல் தொடர்பான திட்டங்களை உருவாக்க ஐரோப்பிய ஒன்றியம் இந்தியாவின் ஆதரவை நாடுகிறது. எனவே இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் ஒரு முக்கிய அறிவுசார் கூட்டாளியாக செயல்பட விரும்புகிறது.

 

காமராஜர் துறைமுகம் இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் இருந்து சுமார் 35 கி.மீ தூரத்தில் உள்ள ஒரு பரபரப்பான துறைமுகமாகும். துறைமுக பயணம், கல்வி உதவி தொகைகள் போன்றவற்றின் மூலம் இந்திய கடல்சார் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்த துறைமுகம் அதிகபடியான பயிற்சியை வழங்கும்.

***

ANU/AD/IR/RS/KRS


(Release ID: 1968893) Visitor Counter : 133


Read this release in: English