சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பொரிப்பகங்களில் வளர்க்கப்பட்ட பச்சை வரி இறால் குஞ்சுகளை கடலில் விடுதல்
இடுகை இடப்பட்ட நாள்:
18 OCT 2023 7:02PM by PIB Chennai
18.10.2023 (புதன்கிழமை) அன்று, 3.5 மில்லியன் பச்சைவரி இறால் குஞ்சுகள், மரைக்காயர்பட்டினம், மன்னார் வளைகுடா கடற்பகுதியில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் நிதியுதவியுடன், "தமிழ்நாட்டின் மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடல் பகுதியில், பச்சை வரி இறால் குஞ்சுகளை, பொரிப்பகங்களில் வளர்த்து, கடலில் விடுதல்" என்ற திட்டத்தின் கீழ் மத்திய கடல்மீன்வள ஆராய்ச்சிநிலைய விஞ்ஞானிகள் மற்றும் பணியாளர்களால் கடலில் விடப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மண்டபம் பிராந்திய நிலையத்தின் தலைவர், முனைவர் K.வினோத் திட்டத்தின் தலைவர், Dr. G.தமிழ்மணி தலைமை தாங்கினர். இத்திட்டம் துவங்கியதிலிருந்து (பிப்ரவரி, 2022), இதுவரை 83.64 மில்லியன் பச்சை வரி இறால் குஞ்சுகள் மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடற்பகுதியில் விடப்பட்டன.



***
AD/IR/KRS
(வெளியீட்டு அடையாள எண்: 1968886)
வருகையாளர் எண்ணிக்கை : 99