சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

வருமான வரிச்சட்ட விதிமுறைகளை மீறிய இரண்டு பேருக்கு தண்டனை

Posted On: 10 OCT 2023 5:54PM by PIB Chennai

2023-24 நிதியாண்டில், வருமான வரித்துறையின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டலத்தில், வேண்டுமென்றே வருமான வரிப்படிவம் சமர்ப்பிக்கத் தவறியதற்காகவும், வேண்டுமென்றே வரி செலுத்தத் தவறியதற்காகவும், பொய்யான உறுதிமொழி அளித்ததற்காகவும் திரு. திலீப்குமார் மேத்தா, திரு. பிரவீன் குமார் மேத்தா ஆகிய இரண்டு பேருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

2013-14 ஆம் மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரிப்படிவத்தில் அசையாச் சொத்தை விற்பனை செய்ததன் விளைவாக பெறப்பட்ட ரூ.6.30 கோடிக்கான மூலதன ஆதாய  வருமானத்தை (Capital Gain) சேர்த்து தாக்கல் செய்யத்  தவறியதுடன், அதற்கான வரியையும் செலுத்தவில்லை. தாமதமாக தாக்கல் செய்யப்பட்ட வருமான வரிப் படிவத்தில் மூலதன ஆதாயங்களுக்கான வரியை செலுத்தியதாக மேற்கண்ட இரண்டு பேரும் பொய்யா தகவலைத் தெரிவித்துள்ளனர். 

அரசுத் தரப்பில் இது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட  வழக்குகளை விசாரித்த, சென்னை, பொருளாதாரக் குற்றப்பிரிவு நீதிமன்றத்தின் கூடுதல் தலைமைப் பெருநகர நீதிபதி, 27.09.2023 தேதியிட்ட உத்தரவில், அனைத்துக் குற்றங்களும் நிரூபிக்கப்பட்டு, அவர்களுக்குத் தலா இரண்டு ஆண்டுகள் கடுங்காவல்  தண்டனையும், தலா ரூ. 25,000 அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த தண்டனைகளை ஒருசேர அனுபவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

………………

AD/SMB/PKV/AG/KRS


(Release ID: 1966357)
Read this release in: English