சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் திருச்சி கள அலுவலகம் திருச்சி தேசிய தொழிநுட்பக் கழகம் இணைந்து வாழவந்தான்கோட்டையில் ஒன்றாம் தேதி ஒரு மணி நேரம் ஒருங்கிணைந்து தூய்மைப் பணி மேற்கொண்டது

प्रविष्टि तिथि: 01 OCT 2023 3:37PM by PIB Chennai

மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் திருச்சி கள அலுவலகம் திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகம்  இணைந்து ஒன்றாம் தேதி ஒரு மணி நேரம் ஒருங்கினைத்து தூய்மைப் பணி இயக்கம் வாழவந்தான்கோட்டையில்   அக்டோபர் 1 காலே 10 மணி முதல் 11 மணி வரே மேற்கொள்ளப்பட்டது .  பிரதமர் திரு நரேந்திர மோடி அகில இந்திய வானொலி மனதின் குரல் நிகழ்ச்சியில் கேட்டுக்கொண்டதையடுத்து நாடு முழுவதும் ஒன்றாம் தேதி ஒருமணி நேரம் ஒன்றிணைந்து தூய்மைப் பணிகள் அக்டோபர் 1  மேற்கொள்ளப்பட்டது

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கல்விக் கழக இயக்குநர் முனைவர் ஜி அகிலா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருச்சி கள விளம்பர அலுவலர் திரு கே தேவி பத்மநாபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

துவாக்குடி வாழவந்தான்கோட்டை  ஏறி தூர்வாரும் பணியில் தேசிய தொழில்நுட்பக் கழகத்தைச் சேர்ந்த 200 மாணாக்கர் ஈடுப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்  துறை தலைவர்கள் முனைவர் பன்னீர்செல்வம் முனைவர் கார்வேம்பு பேராசிரியர் முனைவர் பெருமாள்சாமி திருச்சி கள விளம்பர உதவியாளர் திரு எஸ் அருண்குமார் நேரு யுவ கேந்திரா அலுவலர் திரு மகேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். திருச்சி துவாக்குடி வாழவந்தான்கோட்டை ஏறி தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டு குப்பைகள் அகற்றப்பட்டது. தூய்மை குறித்த பிரசுரங்கள் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டன. முன்னதாக திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழக வளாகத்தில் தூய்மை விழிப்புணர்வு  மனித சங்கிலி நிகழ்ச்சி இயக்குநர் முனைவர் அகிலா தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமான பேராசிரியர்கள் மாணாக்கர் கலந்து கொண்டனர்.

    

    

*** 

AP/DL


(रिलीज़ आईडी: 1962708) आगंतुक पटल : 138
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English