சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

வேலூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (விஐடி), சென்னையில், இந்திய தர நிர்ணய அமைவனம் (BIS) சார்பில் இன்று ஒரு நாள் பயிலரங்கம் நடைபெற்றது

Posted On: 28 SEP 2023 1:56PM by PIB Chennai

இந்திய தேசிய தர நிர்ணய அமைப்பான இந்திய தர நிர்ணய அமைவனம் (BIS), இந்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும். இது தொழில்துறையின் நலனுக்காகவும், நுகர்வோர் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்டும் தயாரிப்பு சான்றிதழ் (ஐ.எஸ்.ஐ குறியீடு), மேலாண்மை அமைப்புகள் சான்றிதழ், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் / கலைப் பொருட்களுக்கான ஹால்மார்க் முத்திரை  மற்றும் ஆய்வக சேவைகளின்  போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது.

இந்திய தர நிர்ணய அமைவனம்  தனது கல்வி அவுட்ரீச் திட்டத்தின் ஒரு பகுதியாக, வேலூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (விஐடி), சென்னை நிறுவனத்துடன் 04 ஆகஸ்ட் 2023 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக, இந்திய தர நிர்ணய அமைவனம் , சென்னை கிளை அலுவலகம் சார்பில், வேலூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (விஐடி), சென்னையில், கல்லுாரி பேராசிரியர்களுக்கான ஒரு நாள் பயிலரங்கம் இன்று  நடந்தது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம்,கல்வி நிறுவனங்கள் மற்றும் அதன் ஆசிரியர்கள், தரப்படுத்தல் மற்றும் இணக்க மதிப்பீடு தொடர்பான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்களை மேற்கொள்வதன் மூலமும், நிறுவனங்களில் தரப்படுத்தலுடன் தொடர்புடைய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்களுக்கான உள்கட்டமைப்பு ஆதரவை மேம்படுத்துவதன் மூலமும், கல்வி பாடத்திட்டத்தில் தரப்படுத்தல் பற்றிய தலைப்புகளை அறிமுகப்படுத்துவதன் மூலமும், தரப்படுத்தல் குறித்த பயிற்சி மற்றும் குறுகிய கால கல்வித் திட்டங்களை ஏற்பாடு செய்வதன் மூலமும்,தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் பணியகத்தின் தொழில்நுட்ப குழுக்கள் மூலம் தரப்படுத்தல் நடவடிக்கைகளில் பங்கேற்பதன் மூலமும்  தர நிர்ணய  அமைப்புகளின் விரிவுபடுத்துவதை பிஐஎஸ் நோக்கமாகக் கொண்டுள்ளது.

பிஐஎஸ் அதிகாரிகள் குழு திரு. ஏ.ஆர்.உன்னிகிருஷ்ணன், விஞ்ஞானி-எஃப் & மூத்த இயக்குநர் (டெல்லி), திருமதி ஜி.பவானி, விஞ்ஞானி-இ/இயக்குநர் (சென்னை), திரு. கே.விஜயவீரன், விஞ்ஞானி-இ மற்றும் இயக்குநர் (இமாச்சலப் பிரதேசம்), திரு. சுதான்ஷு ராய், விஞ்ஞானி-டி & இணை இயக்குநர் (டெல்லி), திருமதி எம்.நாகவர்ஷினி விஞ்ஞானி-பி (டெல்லி), திருமதி அனுரிதா நிதி ஹெம்ரோன், விஞ்ஞானி-பி (சென்னை) ஆகியோர் கலந்து கொண்டு பயிலரங்கை நடத்தினர்.

இந்த பயிலரங்கில் நாட்டில் BIS மற்றும் தரப்படுத்தல் சுற்றுச்சூழல் அமைப்பின் கண்ணோட்டம் குறித்த அம்சங்கள் அடங்கும்; சிவில், எலக்ட்ரிக்கல் / எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், மெட்டலர்ஜி, கெமிக்கல் / ஃபுட் ஆகியவற்றின் தயாரிப்புகளுடன் ஒரு தரநிலையை உருவாக்குதல்; நியமங்களை உருவாக்குவதில் ஆராய்ச்சித் திட்டங்களின் பங்கு; பி.ஐ.எஸ்ஸின் டிஜிட்டல் முன்முயற்சிகள்; இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்காக வேலூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (விஐடி), சென்னையின் டாக்டர் கே அண்ணாமலை, டீன், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறை மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுமார் 70 பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

***

AD/DL


(Release ID: 1961650) Visitor Counter : 129


Read this release in: English