சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
CSIR நிறுவன தின கொண்டாட்டங்கள்
Posted On:
26 SEP 2023 5:25PM by PIB Chennai
மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி அமைப்பான புது தில்லியில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி கழகத்தின் (CSIR), நிறுவன தினம், சென்னையிலுள்ள கட்டுமான பொறியியல் ஆராய்ச்சி மையமும் (CSIR-Structural Engineering Research Centre (CSIR-SERC)) மற்றும் CSIR மெட்ராஸ் காம்ப்ளக்ஸ்(CMC) ஆகியவற்றால், தரமணியில் உள்ள சி.எஸ்.ஆர்.ஏ. வளாகத்தில், 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 26 ஆம் தேதி பெரும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
CSIR நிறுவன தினத்தினை முன்னிட்டு சி எஸ் ஐ ஆர் – கட்டுமான பொறியியல் ஆராய்ச்சி மையம் மற்றும் சி எஸ் ஐ ஆர் சென்னை வளாகத்தில் உள்ள CSIR-CECRI, CSIR-CEERI, CSIR-CSIO, CSIR-NEERI மற்றும் CSIR-NML ஆகிய அனைத்து ஆய்வகங்களும், சென்னை திரிசூலதில் அமைந்துள்ள கோபுர வடிவ கட்டுமானங்களின் சோதனை மற்றும் அராய்ச்சி நிலையமும் பார்வையாளர் தினம் மற்றும் அறிவியலை பொதுமக்களிடம் சென்றடைய செய்யும் தினம் அனுசரிக்கப்பட்டன.
CSIR வளாகத்தில் உள்ள அனைத்து ஆய்வகங்களும் மற்றும் TTRSம் பொது மக்களுக்கு காலை 9.30 முதல் பிற்பகல் 3:00 மணி வரை திறந்திருந்து பார்வையாளர்களை வரவேற்க்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தொழில்நுட்பங்கள், உற்பத்தி பொருட்கள் மற்றும் உன்னத வசதிகள் பார்வையாளர்களின் நன்மைக்காக காட்சிப்படுத்தப்பட்டு விளக்கமளிக்கப்பட்டன. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், தொழில் முனைவோர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் உட்பட 7,900 க்கும் அதிகமானோர் இந்த வளாகத்தை மிகவும் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். அவர்கள் தற்போது ஆய்வுகூடங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் உருவாக்கிய பன்முக ஆராய்ச்சி மேம்பாட்டு திட்டங்களை நேரில் கண்டு, விஞ்ஞானி மற்றும் தொழில்நுட்ப ஊழியர்களுடன் ஆர்வத்துடன் கலந்துரையாடினர். பார்வையாளர்கள் உன்னிப்பாக ஆர்வம் காட்டினர்.
C3PU.JPG)
***
(Release ID: 1960930)
Visitor Counter : 167