சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
மத்திய தகவல் தொடர்பகம் சார்பில் நாவலூர்குடப்பட்டு அரசு கலை கல்லூரியில் தூய்மையே சேவை உறுதி மொழி ஏற்றப்பட்டது
Posted On:
26 SEP 2023 4:15PM by PIB Chennai
மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் திருச்சி மக்கள் தொடர்பகம் சார்பில் நாவலூர் குட்டப்பட்டு அரசு கலைக் கல்லூரியில் தூய்மையே சேவை உறுதி மொழி ஏற்றப்பட்டது
அரசு அறிவியல்க் கலை கல்லூரி முதல்வர் முனைவர் ஜே லலிதா தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருச்சி கள விளம்பர அலுவலர் திரு கே தேவி பத்மநாபன் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் முனைவர் குணசுந்தரி திருச்சி கள விளம்பர உதவியாளர் திரு எஸ் அருண்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மத்திய மக்கள் தொடர்பகம் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் இணைந்து பல்வேறிடங்களில் தூய்மையே சேவை உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. மேலும் தூய்மையே சேவை கடந்த செப்டம்பர் 15 தொடங்கி அக்டோபர் 2 வரே நடைபெறுகிறது. தூய்மை இந்தியா இயக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மாணாக்கர் தூய்மைப் பணிகளில் ஈடுபட்டு கல்லூரி வளாகம் தூய்மையாக வைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக அரசு கலை கல்லூரியில் நாட்டு நலப் பணி மாணாக்கர் தலைமையில் தூய்மைப் பணிகள் மேகொள்ளப்பட்டன. மேலும் நெகிழி குப்பைகள் அகற்றும் பணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தூய்மை இந்தியா இயக்கம் தொடர்பான பிரசாரங்கள் விநியோகிக்கப்பட்டன. சுற்றுசூழல் பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகள் பராமரிப்பது குறித்து விழிப்புணர்வு நடைபெற்றது.
***
M0HK.jpeg)
***
AP/GK
(Release ID: 1960874)
Visitor Counter : 128