சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
இந்திய தர நிர்ணய அமைவனம் (BIS ) குடிநீருக்கான ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ் (ஆர்ஓ) அடிப்படையிலான பயன்பாட்டு நீர் சுத்திகரிப்பு முறை - இந்திய தர நியமம் 16240 குறித்த மனக் மந்தன் கலந்துரையாடல் நிகழ்ச்சியை சென்னையில் இன்று நடத்தியது
Posted On:
26 SEP 2023 4:07PM by PIB Chennai
இந்திய தேசிய தர நிர்ணய அமைப்பான இந்திய தர நிர்ணய நிறுவனம், இந்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும். இந்நிறுவனம் தொழில்துறையின் நலனுக்காகவும், நுகர்வோர் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்டும் தயாரிப்பு சான்றிதழ் (ஐ.எஸ்.ஐ முத்திரை), மேலாண்மை அமைப்புகள் சான்றிதழ், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் / கலைப்பொருட்கள் - ஹால் மார்க்கிங் மற்றும் ஆய்வக சேவைகளின் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது.
இந்தியத் தர நிர்ணய அமைவன சென்னைக் கிளை அலுவலகம் சார்பில் 26.09.23 அன்று "IS .16240-ன் படி குடிநீர் தேவைக்கான ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ் (ஆர்.ஓ) அடிப்படையிலான பயன்பாட்டு நீர் சுத்திகரிப்பு முறை" என்ற தலைப்பில் பி.ஐ.எஸ் - மானக் மந்தன் -கலந்துரையாடல் நிகழ்ச்சி 26.09.23 அன்று ஹோட்டல் ராஜ்பார்க், 180, டி.டி.கே சாலை, பார்த்தசாரதி புரம், ஆழ்வார்பேட்டை, சென்னையில் நடைபெற்றது.
திருமதி.ஜி.பவானி, விஞ்ஞானி-இ/இயக்குநர் மற்றும் தலைவர் (சென்னை கிளை அலுவலகம்), பங்கேற்பாளர்களை வரவேற்று, திட்டத்தின் நோக்கங்களை விளக்கினார். தனது உரையின் போது, "பி.ஐ.எஸ் தொழில்துறையின் நன்மைக்காக "மானக் மந்தன்" என்ற தலைப்பில் தொடர்ச்சியான கலந்துரையாடல்-நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகிறது, இது ஒவ்வொரு மாதமும் திட்டமிடப்பட்டுள்ளது, மேலும் புதிய தரநிலைகளை அறிமுகப்படுத்தவும், உள்ளூர் உற்பத்தியாளர்கள், தொழில்துறை மற்றும் வர்த்தக அமைப்புகள், வர்த்தக சபைகள், தொழில் சங்கங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் அல்லது அத்தகைய தயாரிப்புகளைப் பயன்படுத்தும் அமைப்புகளுடன் முக்கியமான திருத்தங்கள் மற்றும் பரந்த வரைவுகளைப் பகிர்ந்து கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மானக் மந்தன் நிகழ்வில் நிகழ்ச்சியின் - தர நியமம் தொடர்புடைய அரசுத் துறைகள், ஒழுங்குமுறை அமைப்புகள், ஆய்வகங்கள், சிவில் சமூகக் குழுக்கள் மற்றும் கல்வியாளர்கள் கலந்து கொள்வர்" என்றார்.
திருமதி மீனாட்சி கணேசன், விஞ்ஞானி-எஃப் & தலைவர் (தெற்கு மண்டல ஆய்வகம்), பி.ஐ.எஸ், சென்னை, மனித உடலுக்கு மிகவும் இன்றியமையாத நீரின் தரத்தை தரப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து பேசினார். ஆர்.ஓ அடிப்படையிலான நீர் சுத்திகரிப்பு முறைகளில் பி.ஐ.எஸ் அதன் சிறந்த தர நியமம் ஒன்றைக் கொண்டு வந்துள்ளது என்றும் அவர் கூறினார்.
திரு.யு.எஸ்.பி யாதவ்,. விஞ்ஞானி-எஃப் மற்றும் பி.ஐ.எஸ்- தெற்கு மண்டல துணை இயக்குநர் ஜெனரல் முக்கிய குறிப்பு உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையின் போது, குறிப்பாக நகர்ப்புறங்களில் அதிகரித்து வரும் நீரின் தேவை, நிலத்தடி நீர் ஆதாரங்களையே கணிசமாக நம்புவதற்கு வழிவகுத்துள்ளது என்றும் , நிலத்தடி நீர்பல்வேறு தாதுக்கள் உட்பட கரைந்த திடப்பொருட்களின் அதிக செறிவுகளைக் கொண்டுள்ளன என்றார். கூடுதலாக, நிலத்தடி நீர் ஆதாரங்கள் கன உலோகங்கள், ஃவுளூரைடு அல்லது ஆர்சனிக் போன்ற தீங்கு விளைவிக்கும் பொருட்களை அதிக அளவில் கொண்டிருக்கலாம் என்றும் அசுத்தமான குடிநீர் பலவிதமான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும், குறிப்பாக நீரினால் பரவும் நோய்களுக்கு வழிவகுக்கும் என்றும் தெரிவித்தார்.
மேலும் , படிவுகள் மற்றும் கார்பன் வடிப்பான்களுடன் இணைந்து ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ் (RO) தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் நீரின் தரத்தை பராமரிப்பதில் உள்ள சவால்களை தீர்க்க முடியும் என்றும் அவர் கூறினார். இந்த தொழில்நுட்பம் தண்ணீரை சுத்திகரிப்பதிலும் பல்வேறு கனிம, கரிம மற்றும் நுண்ணுயிரியல் அசுத்தங்களை அகற்றுவதிலும் மிகவும் பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பத்தின் செயல்திறனை அங்கீகரித்து, ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் அமைப்புசாரா துறைகளில் உள்ள பல உற்பத்தியாளர்கள் மற்றும் அசெம்பிள்கள் ஆர்ஓ நீர் சுத்திகரிப்பு சந்தையில் நுழைந்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.
திருமதி நிதாஷா டோகர் (விஞ்ஞானி - டி / இணை இயக்குநர் / உறுப்பினர் செயலாளர்-உணவு மற்றும் வேளாண்மைத் துறை (FAD), பிஐஎஸ்-டெல்லி தனது விளக்கக்காட்சியின் போது இந்த வளர்ந்து வரும் போக்குக்கு பதிலளிக்கும் விதமாக, இந்திய தேசிய தர நிர்ணய அமைப்பான இந்திய தர நிர்ணய அமைவனம் , ஆர்ஓ அடிப்படையிலான நீர் சுத்திகரிப்பு அமைப்புகளுக்காக இந்திய தர நியமமான IS 16240 ஐ உருவாக்கியுள்ளது என்றார் . இந்த தரநிலை இந்த அமைப்புகளின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்திற்கான குறைந்தபட்ச தேவைகளின் தொகுப்பை நிறுவுகிறது, செயல்திறன் அளவுகோல்களை கோடிட்டுக் காட்டுகிறது, மேலும் சுத்திகரிக்கப்பட்ட நீருடன் தொடர்பு கொள்ளும் பொருட்களை பரிசோதிப்பதற்கான அளவுகோல்களைக் குறிப்பிடுகிறது. அதிகரித்து வரும் தேவை மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுடன், ஆர்ஓ அடிப்படையிலான நீர் சுத்திகரிப்பு அமைப்புகளின் வடிவமைப்பு மற்றும் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள அனைத்து பங்குதாரர்களும் பொருந்தக்கூடிய இந்திய தரத்தைப் பற்றி நன்கு அறிந்திருப்பது அவசியம் என்றும் கூறினார் . மேலும், தரநிலை விரிவானது, நியாயமானது மற்றும் நிஜ உலக சூழ்நிலையில் நடைமுறை யதார்த்தங்களுடன் துல்லியமாக ஒத்துப்போகிறது என்பதை உறுதிப்படுத்த பங்குதாரர்களிடையே பயனுள்ள தகவல்தொடர்பு மற்றும் ஒத்துழைப்பை ஊக்குவிப்பது அவசியம் என்றும் தெரிவித்தார்.
பி.ஐ.எஸ் உருவாக்கிய சமீபத்திய தர நியமங்கள் குறித்த கலந்துரையாடலை சென்னை கிளை அலுவலகத்தின் விஞ்ஞானி - டி / இணை இயக்குநர் திரு.பி.ஜே.கௌதம் நடத்தினார்.
IS 16240 இன் படி [ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ் (RO) அடிப்படையிலான பயன்பாட்டு நீர் சுத்திகரிப்பு அமைப்பு தயாரிப்பு முறை, BIS இன் கட்டாய தர சான்றிதழின் ( Mandatory Certification ) கீழ் உள்ளது.
இன்றய நிகழ்வில் , 120க்கும் மேற்பட்ட உற்பத்தியாளர்கள் மற்றும் அசெம்பிளர்கள் பங்கேற்றனர். தரநிலையின் முக்கியத்துவம் மற்றும் , இந்த உரிமத்திற்கு விண்ணப்பிப்பதற்கான நடைமுறை மற்றும் இந்த சான்றிதழில் பின்பற்றப்படும் பல்வேறு சோதனை முறைகள் குறித்து பங்கேற்பாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

***
AP/GK
(Release ID: 1960864)
Visitor Counter : 160