சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
சென்னை தெற்கு கோட்டப்பிரிவில் செப்டம்பர் 27 அன்று அஞ்சல் குறைதீர்ப்பு முகாம்
Posted On:
21 SEP 2023 3:32PM by PIB Chennai
சென்னை தெற்குக் கோட்டத்தின் கீழ் இயங்கும் அஞ்சலகங்களுக்கு உட்பட்ட வாடிக்கையாளர்களுக்கான குறைதீர்ப்பு முகாம் அஞ்சல்துறையின் தெற்குக் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளரால் தியாகராய நகர் தபால் நிலைய வளாகம்(முதல்மாடி), வடக்கு உஸ்மான் சாலை, தி.நகர், சென்னை- 600 017 என்ற முகவரியில் உள்ள அவரது அலுவலகத்தில் 27.09.2023 (புதன்கிழமை) அன்று மாலை 03.00 மணிக்கு நடத்தப்பட உள்ளது.
தபால்/ மணியார்டர் சம்பந்தமான புகார் எனில் அனுப்பப்பட்ட தேதி, அனுப்புநர் மற்றும் பெறுநர் பெயர், முகவரி, கண்காணிப்பு எண் போன்ற விவரங்கள் இருக்க வேண்டும். சேமிப்பு திட்டம், அஞ்சல் காப்பீடு, கிராமிய அஞ்சல் காப்பீடு சம்பந்தமான புகாராக இருப்பின், கணக்கு எண், கணக்கு வைத்திருப்பவரின் பெயர் மற்றும் முகவரி, காப்பீட்டுதாரரின் பெயர் மற்றும் முழு முகவரி, பணம் செலுத்திய முழு விவரம், பணம் செலுத்திய அலுவலகத்தின் பெயர் இருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட புகாருடன் அஞ்சல்துறை கடிதத்தொடர்பு ஏதேனும் இருப்பின் அதனையும் இணைக்க வேண்டும்.
தபால் அலுவலகங்களில் கீழ் நிலையில் ஏற்கனவே அளிக்கப்பட்ட புகார்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத மனுக்கள் கோட்ட அளவிலான குறைதீர்ப்பு முகாமில் விசாரிக்கப்படும். புதிய புகார்கள் விசாரிக்கப்பட மாட்டாது.
புகார்களை சாதாரண அல்லது பதிவுத்தபாலில் அனுப்ப வேண்டும். தனியார் அஞ்சல் மூலம் அனுப்பப்படும் புகார்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. கடிதத்தின் உறையின் மேல் கோட்ட அளவிலான குறைதீர்ப்பு முகாம்- சென்னை நகர தெற்குக் கோட்டம் என்று குறிப்பிட வேண்டும்
***
AD/IR/AG/GK
(Release ID: 1959362)
Visitor Counter : 111