சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
சைபர் குற்றங்களைத் தடுக்க தொலைத்தொடர்புத் துறையின் முன்முயற்சிகள்
Posted On:
15 SEP 2023 4:58PM by PIB Chennai
உள்நாட்டில் உருவாக்கப்பட்ட கருவியான ஏ.எஸ்.டி.ஆரின் இரண்டாம் கட்டத்தின் கீழ் (தொலைத்தொடர்பு சிம் சந்தாதாரர் பரிசோதனைக்கான செயற்கை நுண்ணறிவு மற்றும் முக அங்கீகாரத்தால் இயங்கும் தீர்வு) தமிழ்நாட்டில் முறைகேடாக வழங்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 5662 மொபைல் இணைப்புகளை மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை கண்டறிந்துள்ளது.
சென்னையில் உள்ள தொலைத் தொடர்புத் துறை களப் பிரிவான தமிழ்நாடு உரிம சேவைப் பகுதி (டி.என்.எல்.எஸ்.ஏ) இந்த இணைப்புகள் அனைத்தையும் பகுப்பாய்வு செய்து, மொபைல் இணைப்புகளின் மறு சரிபார்ப்பின் முடிவுகளின் அடிப்படையில் நடவடிக்கைகளை எடுத்துள்ளது, இது அந்தந்த தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களால் (டி.எஸ்.பி) உண்மையான வாடிக்கையாளர் பயன்பாட்டில் உள்ளதா என்பதை சரிபார்க்க மேற்கொள்ளப்பட்ட ஒரு செயல்முறையாகும், இதன் விளைவாக இத்தகைய 4831 இணைப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த நம்பகத்தன்மையற்ற மொபைல் இணைப்புகள் அனைத்தும் அந்தந்த டி.எஸ்.பி.க்களால் துண்டிக்கப்படுவதை தமிழ்நாடு உரிம சேவைப் பகுதி உறுதி செய்தது. தொலைத் தொடர்புத் துறை வழங்கிய அறிவுறுத்தல்கள் / வழிகாட்டுதல்களின்படி, போலி ஆவணங்களுடன் சிம் விற்பனையில் ஈடுபடும் விற்பனை புள்ளியை கருப்புப் பட்டியலில் சேர்ப்பது, காவல்துறை புகார்களைப் பதிவு செய்வது போன்ற தேவையான நடவடிக்கைகளை சேவை வழங்குநர்கள் எடுத்துள்ளனர்.
அத்தகைய இணைப்புகளின் விவரங்கள் மற்றும் விற்பனை தகவல்கள், தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் எடுத்த நடவடிக்கை ஆகியவை மேல் விசாரணைக்காக தமிழ்நாடு காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
முன்னதாக, ஏ.எஸ்.டி.ஆர் கட்டம் 1 இன் கீழ், 50,000 க்கும் மேற்பட்ட மொபைல் இணைப்புகள் டி.எஸ்.பி.க்களால் துண்டிக்கப்பட்டன, மேலும் தமிழ்நாடு காவல்துறை தவறான மொபைல் இணைப்புகளை வழங்குவதில் ஈடுபடும் மோசடியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது.
தொலைத்தொடர்புத் துறை தனது ஏ.எஸ்.டி.ஆர் தளத்தின் மூலம் எடுத்த நடவடிக்கைகளின் விளைவாக தமிழகத்தில் சைபர் குற்றங்கள் தடுக்கப்பட்டுள்ளன.
***
SM/PKV/GK
(Release ID: 1957733)
Visitor Counter : 107