சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

ஜப்பான் பிரதமரின் மனைவிக்கு பிரதமர் பரிசு


கடம்ப மரத்திலான அழகிய பெட்டியில் வைக்கப்பட்ட காஞ்சிவரம் பட்டாடை

Posted On: 12 SEP 2023 4:15PM by PIB Chennai

காஞ்சிபுரம் பட்டுப் புடவைகள் இந்திய நெசவுத் தொழிலின் தலைசிறந்த படைப்பாகும். செழுமையான, ஒளிரும். வண்ணங்கள், நுட்பமான வடிவமைப்புகள், ஒப்பில்லா கைவினைத்திறன் ஆகியவற்றிற்கு அவை பெயர் பெற்றவை. 'காஞ்சிவரம்' என்ற பெயர், பட்டு நெவுக்குப் பெயர் பெற்ற  ஒரு  தென்னிந்திய நகரமான  தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தைக் குறிப்பதாகும்.   காஞ்சிவரம் பட்டாடை, தங்கள் மூதாதையர்களிடமிருந்து பாரம்பரியத்தையும் நுட்பங்களையும் பெற்ற திறமையான நெசவாளர்களால் தூய மல்பெரி பட்டு நூல்களிலிருந்து நெய்யப்பட்ட கைவினைப்பொருளாகும். இது மிகவும் நீடித்து உழைக்கக்கூடிய  வலுவான துணியாகும் . அதே நேரத்தில், இது ஒரு ராணிக்குரிய  நேர்த்தியையும், நுட்பத்தையும், நவநாகரிக வனப்பையும் வெளிப்படுத்துகிறது.

இந்தப் பட்டாடை, கடம்ப மரத்தால் செய்யப்பட்ட அழகிய பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது. கடம்ப மரம் இந்திய கலாச்சாரம், இந்திய மதங்கள் மற்றும் புராணங்களில் மங்கலகரமானதாக கருதப்படுகிறது. கடம்ப மரத்தாலான இந்தப் பெட்டி, கேரளாவின் கைவினைஞர்களால் அழகிய வேலைப்பாடுகளுடன் செய்யப்படும் கைவினைப்பொருளாக உள்ளது.

  

***

AP/SMB/PKV/GK


(Release ID: 1956623) Visitor Counter : 156


Read this release in: English