சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

பாண்டிச்சேரி பல்கலைக்கழக மானுடவியல் துறை தலைவர் டாக்டர் அஜீத் ஜெய்ஸ்வாலுக்கு அத்துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக அங்கீகாரம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 21 AUG 2023 5:37PM by PIB Chennai

ஒருங்கிணைந்த இந்திய மானுடவியல் மன்றம் மற்றும் கலிங்கா சமூக அறிவியல் நிறுவனம் ஆகியவை பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் மானுடவியல் துறைத் தலைவர் டாக்டர் அஜீத் ஜெய்ஸ்வாலுக்கு அங்கீகாரம் வழங்கி, பாராட்டு சான்றிதழ் அளித்து கௌரவித்துள்ளன. ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் நடைபெற்ற உலக மானுடவியல் மாநாட்டில் இந்த அங்கீகாரம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.  மானுடவியல் துறையில் அர்ப்பணிப்புடன்  அவர் ஆற்றியுள்ள சிறந்த பங்களிப்புகள், ஆய்வுகள், போன்றவற்றைப் பாராட்டும் வகையில் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது

டாக்டர் ஜெய்ஸ்வால், மானுடவியல் துறையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதுடன் மானுடவியல் கல்வித்துறையில் தனி முத்திரையைப் பதித்து இத்துறையில் முன்னோடியாக இருந்து வருகிறார்.

புவனேஷ்வரில் நடைபெற்ற மாநாட்டில் உலகெங்கிலும் உள்ள புகழ்பெற்ற மானுடவியல் அறிஞர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்று கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

மதிப்புமிக்க இந்த அங்கீகாரம் தமக்கு வழங்கப்பட்டதற்காக டாக்டர் அஜீத் ஜெய்ஸ்வால் நன்றி தெரிவித்ததுடன், மானுடவியல் துறையை மேம்படுத்துவதற்கான தமது முயற்சி தொடரும் என தெரிவித்தார்.

*** 

AD/PLM/KPG/GK


(வெளியீட்டு அடையாள எண்: 1950842) வருகையாளர் எண்ணிக்கை : 106
இந்த வெளியீட்டை படிக்க: English